Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் 1218-இறைவா நீ எங்கே இருப்பாயோ  
இறைவா நீ எங்கே இருப்பாயோ
அங்கே எனக்கோர் இடம்வேண்டும்
உன் அருகில் நான் அமர்ந்திட
உன் நிழலில் நான் வாழ்ந்திட
உள்ளம் அமைதி கொள்ளாதோ உயிரே

நான் உன்னை மறந்தாலும் - நீ
என்னை மறப்பதேயில்லை
நான் உன்னை வெறுத்தாலும் - நீ
என்னை வெறுப்பதில்லை
சாய்ந்தே நான் வீழ்கின்றேன்
கரத்தில் என்னைத் தாங்கிடுவாய்
தேவா உன்னைத் தேடுகின்றேன்
அருகில் நீ வருவாயா
சிறகில் சுகம் தருவாயா

நான் உன்னைப் பழித்தாலும் - நீ
என்னைப் பழிப்பதில்லை
நான் உன்னைப் பிரிந்தாலும் - நீ
என்னைப் கை விடுவதில்லை
நோயால் நான் வாடுகிறேன்
குணமாக்கி காத்திடுவாய்
தேவா நான் தேம்புகிறேன்
தேற்றிட நீ வருவாயோ
ஆறுதலைத் தருவாயோ


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!