Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் 1216-இறைவா எனக்கோர் வரம் வேண்டும்  
இறைவா எனக்கோர் வரம் வேண்டும்
நிறைவாய் நின் பதம் பெற வேண்டும்
வாழ்வின் வழியாய் நீ வேண்டும்
வாழ்வின் முடிவாய் நீ வேண்டும்


அமைதி நிறைந்திடும் உலகம் நீ
அன்பில் வாழும் கோவில் நீ - 2
என்னில் நிறைந்திடும் தெய்வம் நீ - 2
என்றும் மறவாத் தாயும் நீ

உலகின் இன்பம் போதாது
உயர்ந்த வாழ்வு போதாது - 2
உம்மை அடைந்து உள்ளத்தில் - 2
உண்மை அருளில் வாழ்ந்திடுவேன்

என்ன சொல்லி நான் அழைப்பேன்
என்ன மொழியில் வேண்டிடுவேன் - 2
எளிமையில் உம்மிடம் பேசிடுவேன் - 2
உமதருள் பெறும் வரை காத்திருப்பேன்


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!