Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் 1214-இறைவா எழுந்தே வர வேண்டும்  
இறைவா எழுந்தே வர வேண்டும்
நிறைவாய் அருளை தர வேண்டும்
நின்வழி சென்றிடும் வரம் வேண்டும்
நிம்மதி வாழ்வில் பெற வேண்டும்

அன்பின் வடிவே ஆரா அமுதே
இன்பப் பெருக்கே பரம் பொருளே (2)
அல்லும் பகலும் உனையே நினைத்து
உருகும் வரமே தருவாயே  (2)
நல்லோர் தீயோர் எல்லா உயிர்க்கும்
நலமே நல்கும் நாயகனே  (2)
நானிலம் அனைத்தும் ஒருங்கே இணைக்கும்
நல்லதோர் இதயம் தருவாயே  (2)

அருட் துணையே...... தனி முதலே........
அக நிறைவே....... ஆண்டவனே........
அக இருள் நீக்கி அருள் ஒளிகாட்ட
அருட் பெரும் சுடரே வாராயோ

என்னை நினைந்து உருகும் தந்தாய்
என்னைத் தந்தேன் உம்மிடமே (2)
என்னில் எண்ணம் சொல்லில் செயலில்
என்றும் நிறைவாய் முழுமுதலே (2)
எளியோர் தாழ்ந்தோர் வறியோர் வாழ்வில்
ஒளியை ஏற்ற அருள்வாயே  (2)
தன்னலம் இன்றி பிறர் நலம் பேணும்
உன்னருள் இதயம் தருவாயே  (2)

அருட் துணையே...... தனிமுதலே.......
அக நிறைவே....... ஆண்டவனே......
அகவிருள் நீக்கி அருள் ஒளிகாட்ட
அருட்பெருக சுடரே வாராயோ


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!