நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1213-இயேசுவே எழுந்தருளுவீர் |
இயேசுவே எழுந்தருளுவீர் எனது நேச இருதயத்தில் நேசிப்பேன் உம்மை மாத்திரமே நித்திய நித்திய காலமுமே யேசுவே அப்பக் குணங்களுள் எனக்காக மறைந்திருக்கிறீர் ஆசையாய் விசுவாசிக்கிறென் அதை நீர் தாமே சொன்ன படியால் ஈதோ நமது சரீரமே இதை நீங்கள் எடுத்துப் புசிப்பீர் யாதொருவன் இதைப் புசித்தால் எப்போதுமே பிழைப்பான் என்றீரே நீங்களும் அப்பத்தை எடுத்து நேரே நமது சரீரமாக்கி வாங்கிப் புசிக்கக் கொடும் என்று வசனித்தீர் குருமார்களுக்கே தேவநற்கருணை விருந்தில் திவ்விய யேசு நாதரல்லாமல் மாவினால் செய்த அப்பமொரு மணலளவென்றாலும் இல்லையே அப்பம் வெளியே தோற்றினும் ஆண்டவர் அதனுள் இருக்கிறார் எப்படி இது நடக்குமோ எனது புத்திக்குள் அடங்காதே கண்கள் தவறிப் போய் விடினும் கர்த்தர் சொன்ன சொல்லு தவறுமோ என் பெரும் மன ஆவலோடே இதை எப்போதும் விசுவசிப்பேன் பக்தியோடிதைப் புசிப்பவன் பாக்கியவாந்தனாக இருப்பான் சுத்தமின்றிப் புசிப்பவனோ யூதாசைப் போல் நாசமாகுவானே |