Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் 1211-இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ  
இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ
மறந்திடுவாயோ மனிதப்பண்பிருந்தால்
யேசுவின் அன்பை

மறந்திடாதிருக்க நீர் சிலுவையிலே அவர்
மரித்துத் தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ

அளவில்லா அன்பு அதிசய அன்பு
ஆழம், அகலம், நீளம், எல்லை காணா அன்பு
களங்கமில்லா அன்பு கருணை சேர் அன்பு
கல்வாரி மலை கண்ணீர் ததும்பும் அவர் அன்பு


எனக்காக மனுவுரு தரித்த நல்லன்பு
எனக்காகத் தன்னையே உணவாக்கும் அன்பு
எனக்காக பாடுகள் ஏற்ற பேரன்பு
எனக்காக உயிரையே தந்த தேவன்பு

அலை கடலை விடப் பரந்த பேரன்பு
அன்னைமார் அன்பெல்லாம் திரையிடும் அன்பு
மலைபோல் எழுந்தென்னை வளைத்திடும் அன்பு
சிலை எனப் பிரமையில் நிறுத்திடும் அன்பு

கலைக்கடங்கா அன்பு கதி தரும் அன்பு
கைதிபோல் யேசுவை சிறையிடும் அன்பு
விலையில்லாப் பலியாக விளங்கிடும் அன்பு
விவரிக்க விவரிக்க வளர்ந்திடும் அன்பு


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!