நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1209-ஆராதிக்கின்றோம் நாங்கள் |
ஆராதிக்கின்றோம் நாங்கள் ஆராதிக்கின்றோம் ஆத்ம நேசர் இயேசுவையே ஆராதிக்கின்றோம் (2) ஆராதிக்கின்றோம் நாங்கள் ஆராதிக்கின்றோம் உண்மையிலும் ஆவியிலும் ஆராதிக்கின்றோம் (2) அல்லேலூயா அல்லேலூயா கீதம் பாடியே அல்லேலூயா கீதம் பாடி ஆராதிப்போமே இன்று இங்கு விசுவாசத்தால் ஆராதிக்கின்றோம் அன்று உம்மை நேரில் கண்டு ஆராதிப்போமே வானோரெல்லாம் ஆராதிக்கும் பரிசுத்தரே ஆனந்தமாய் உந்தன் மக்கள் ஆராதிக்கின்றோம் விலங்குகள் உடையும் பாவங்கள் தீரும் ஆராதனையாலே கோட்டைகள் தகரும் கொடுமைகள் தீரும் ஆராதனையாலே நோய்கள்; தீரும் வாதைகள் தீரும் ஆராதனையாலே ஆணவம் அழியும் தீவினை ஒழியும் ஆராதனையாலே சிறைப்பட்ட அப்போஸ்தலர் ஆராதித்ததால் திருவருளாலே விலங்குகள் தகர விடுதலையானாரே |