Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் 1208-ஆராதனை செய்கின்றேன்  
ஆராதனை செய்கின்றேன் - இறைவா
ஆராதனை செய்கின்றேன் (2)
மகிழ்ச்சியிலும் மனத் தளர்ச்சியிலும்
அன்பு தெய்வமே உமக்கே என்றும்

கரம் பிடித்து உடன் நடந்து
பாசமொழி பேசி வந்தாய் (2)

தனிமையை தகர்த்தெறிந்தாய்
இறைவா உமக்கே ஆராதனை
துணிவுடனே உனைத் தொடர
இறைவா ஆராதனை - என்றும்
உமக்கே ஆராதனை

உனதருகில் நானமர்ந்து
வேதனையைச் சொல்லிடுவேன் (2)
ஆறுதல் தந்திடுவாய்
இறைவா உமக்கே ஆராதனை
சிறகினிலே சுமந்திடுவாய்
இறைவா ஆராதனை - என்றும்
உமக்கே ஆராதனை



 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!