Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் 1207-ஆராதனை ஆராதனை - இதய  
ஆராதனை ஆராதனை - இதய
வேந்தே ஆராதனை
அப்பத்தின் வடிவில் நெஞ்சத்தைத் திறக்கும்
ஆண்டவா உமக்கே ஆராதனை (2)

நதிகள் கடலில் கலக்கும் நேரம்
அமைதி பிறக்கும் நேரம் - எங்கள்
இதயம் உறவில் நிலைக்கும் நேரம்

உம்மில் நிலைக்கும் நேரம்
இயேசுவே உம்மை வணங்கும் நேரம்
எம்மனம் இறைமயமாகும் (2)
வாழ்வு தரும் வார்த்தை எல்லாம்
காதில் ஒலித்திடுமே கருத்தில் நிலைத்திடுமே

நீதி உறங்க உண்மை உறங்க
மனிதர் தவிக்கும் நேரம் - மண்ணில்
பகைமை போர்கள் போதை நோய்கள்
இருளை பரப்பும் நேரம்
இயேசுவே தேவனே இறங்கி வாரும்
நன்மைகள் ஓங்கிட வாரும் (2)
வானமுதே வாழ்பவரே
வாழ்வு தாருமையா வலிமை தாருமையா


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!