நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1206-அருட் திரு தேவ தேவன் போற்றி |
அருட் திரு தேவ தேவன் போற்றி அவர் தம் தூய நாமம் போற்றி அவர் மகன் இயேசு கிறிஸ்து போற்றி அவர் தம் தூய நாமம் போற்றி அவர் தம் தூய இதயம் போற்றி அவர் தம் விலையிலா குருதி போற்றி தேவ நற்கருணையில் இயேசு போற்றி தேற்றிடும் தூய ஆவி போற்றி தேவனின் அன்னை கன்னிமரி போற்றி அவளது மாசில்லா உற்பவம் போற்றி அவளது மாண்புறு விண்ணேற்பு போற்றி அவளது புனித நாமம் போற்றி அவளது துணைவர் சூசை போற்றி தூதரில் புனிதரில் தேவன் போற்றி |