நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1205-அருட்திரு தேவன் |
அருள் திரு தேவ தேவன் போற்றி அவர் தம் திரு நாமம் போற்றி அவர் மகன் யேசு கிறிஸ்து போற்றி அவர் தம் திரு அன்பே போற்றி அருள் நிறை தூய ஆவி போற்றி அவர் தம் திரு ஞானம் போற்றி அவர் தம் தூய இதயம் போற்றி அவர் தம் விலையில்லா குருதி போற்றி தேவ நற்கருணையில் யேசு போற்றி அருள் நிறை தூய ஆவி போற்றி அருள் நிறை அன்னை மரியாள் போற்றி அவர் தம் திரு தூய்மை போற்றி அருள் நிறை சூசை முனியும் போற்றி அவர் தம் திரு வாய்மை போற்றி அருள் நிறை தூதர் அமரர் போற்றி அவர் தம் திரு சேவை போற்றி அருள் திரு தேவ தேவன் போற்றி அவர் தம் திரு நாமம் போற்றி |