நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1204-அன்னமும் பானமும் ஆகிய வடிவில் |
அன்னமும் பானமும் ஆகிய வடிவில் அமைந்துள்ள தேவ நற்கருணை நாதா இளைப்பையம் பசியையும் ஏக்கமும் தீர்ப்பாய் தளர்ச்சியைப் போக்குவாய் தாகமும் தணிப்பாய் அளவில்லா ஞான ஆனந்தம் விளைப்பாய் வளர்ச்சியைத்தருவாய் வாழ்வினை அளிப்பாய் உணவை நான் வேண்டினால் உணவும் நீயாவாய் துணையை நான் வேண்டினால் துணையும் நீயாவாய் உணர்வை நான் வேண்டினால் உணர்வும் நீயாவாய் துணிவை யான் வேண்டினால் துணிவும் நீயாவாய் அஞ்சி நான் பதைத்தால் அச்சம் நீ ஒழிப்பாய் கெஞ்சி நான் கேட்டால் கேட்டது கொடுப்பாய் நெஞ்சில் நான் வாடினால் நிவாரணம் செய்வாய் தஞ்சம் நீ என்றால் தயவுடன் ஏற்பாய் ஐயனை வேண்டினால் ஐயனுமாவாய் தாயை நான் வேண்டினால் தாயும் நீயாவாய் நாயகன் வேண்டினால் நாயகனாவாய் நேயனை வேண்டினால் நேயனுமாவாய் |