Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் 1203-அன்பெனும் வீணையிலே  
அன்பெனும் வீணையிலே - நல்
ஆனந்தக் குரலினிலே
ஆலய மேடையிலே - உன்
அருளினைப் பாடிடுவேன்

அகமெனும் கோவிலினிலே - என்
தெய்வமாய் நீயிருப்பாய்
அன்பெனும் விளக்கேற்றி - உன்
அடியினை வணங்கிடுவேன்

வாழ்வெனும் சோலையிலே - நல்

தென்றலாய் நீயிருப்பாய்
தூய்மையெனும் மலரை - நான்
தாள்மலர் படைத்திடுவேன்

தென்றலே கமழ்ந்திடுமே - என்
தெய்வமே நீ இருக்க
இன்பம் மலர்ந்திடுமே - நான்
உன்னில் வாழ்ந்திருக்க

மனமெனும் வீட்டினிலே - என்
விருந்தாய் நீ வருவாய்
குறையிலா வாழ்வினிலே - நான்
விருந்தாய் உனக்களிப்பேன்



 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!