Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் 1202-அன்பும் அமைதியும் நீரே  
அன்பும் அமைதியும் நீரே
இன்ப நற்கருணை நாதா (2)
நன்றியும் துதியும் புகழும்
நாளும் உமக்கே இறைவா - 2
இயேசுவே இறைவா போற்றி - உந்தன்
நேச நற்கருணை போற்றி (2)


எந்நிதி இருந்தும் யாரிருந்தும் - உன்
சந்நிதி போலெது பூமியிலே (2)
கண்ணெதிரே நின்று கரம் நீட்டும் - 2
கருணையே உம்மில் சரணடைந்தோம்
(இயேசுவே இறைவா...)

ஆசையில் உழன்றோம் சுகம் இழந்தோம் - எம்
அறிவியல் உலகில் நெறி இழந்தோம் (2)
பாசமுடன் நீர் பரிமாறும் - 2
கருணையில் நலம் யாம் கண்டோம்
(இயேசுவே இறைவா...)


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!