நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1200-அன்பே உருவான இறையே |
அன்பே உருவான இறையே என் வாழ்வில் ஒளியேற்ற வா - உன் அன்பிலே எந்நாளும் நானும் வாழவே அன்பே அன்பே அன்பே தனி மரமாய் தனிமையிலே தவித்திருந்தேனே தள்ளாடும் வேளையில் தஞ்சமானாய் - 2 நீயில்லா என் வாழ்வு வாழ் வாகுமோ நீரில்லா நிலம் போல பாழாகுமே - 2 பாழாகுமே துன்பங்கள் துயரங்கள் எனைச் சூழ்கையில் தூய உன் அன்பிற்காய் ஏங்கினேனே - 2 தாயாக நீ என்னைத் தேற்றாவிடில் தேய் பிறையாய் என் வாழ்வு வீணாகுமே - 2 வீணாகுமே |