நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1199-அன்பே பிரதானம் |
அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம் துணிவுடன் உடலைத் சுட்டெரித்தாலும் அன்பில்லையாகில் அதன் பயன் இல்லை சாஸ்திரம் பாசையும் சகலமுமென்ன சற்குண அன்பு சகலமுமில்லையேல் மலை நகர்ந்தாலும் மதில் உயர்ந்தாலும் மண்ணுயிர் அன்பே மணி நிகராமே பணிவுடன் பொறுமை பொலிவுடன் தயவு பொற்குணமெல்லாம் போற்றுமே என்றும் சுய நலம் அழியும் சுக நிலையோடு ஜெகமதில் ஒழியும் செருக்குகளெல்லாம் சகலமும் நம்பும் சகலமும் தாங்கும் சுக வாழ்வு நிறையும் அன்புடன் வாழ்ந்தால் |