Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் 1198-அன்பின் தேவநற்கருணையிலே  
அன்பின் தேவநற்கருணையிலே
அழியாப் புகழோடு வாழ்பவரே
அன்புப் பாதையில் வழி நடந்தே
அடியோர் வாழ்ந்திட துணை செய்வீர்

அற்புதமாக எமைப் படைத்தீர்
தற்பரன் நீரே எமை மீட்டீர்
பொற்புடன் அப்ப இரச குணத்தில்
எப்பொழுதும் வாழ் இறைவனானீர்
எத்தனை வழிகளில் உமதன்பை
எண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர்


கல்வாரி மலையின் சிகரமதில்
கனிவுடன் தினம் எமை நிலை நிறுத்தும்
நற்கருணை விசுவாசமதில்
நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்
இளமையின் பொழிவால் திகழ் திருச்சபையும்
யாவரும் வாழத் தயை புரிவீர்

ஞானம் மிகுந்த ஈழமதில்
நல்லொளி பாய்ச்சும் இறைவனே நீர்
ஞானமெல்லாம் இருள் நீங்கிடவே
நாடுகள் வீடுகள் எங்கணுமே
நலம் பல பொழிவீர் நம் தேவா
நற்கருணை வாழ் நாயகனே



 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!