நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1197-அன்புருவாய் எம் நடுவில் |
அன்புருவாய் எம் நடுவில் ஆசையுடன் வந்துதித்து பொன்னொளியுள் வீற்றிருக்கும் பூபதியே நமஸ்காரம் பரலோக உன்னதத்தில் பாக்கியமாய் வாழ்பவர் நீர் நரலோக வாசிகளுள் நலமேது தேடி வந்தீர் நித்திய பிதாவினண்டை நிரந்தரமாய் வீற்றிருக்க சுத்தமில்லாப் பூவுலகை சுதந்தரமாய்க் கொண்டதேனோ வானமதில் மேல்வரங்கள் வாழ்த்தி என்றும் போற்றுகின்ற ஞானமே எம் மத்தியை நீர் நாடினதே ஆச்சரியம் |