நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1196-அப்பத்தின் சாயலுள் மறைந்தே |
அப்பத்தின் சாயலுள் மறைந்தே வசிக்கும் ஒப்பற்ற தேவா நின்னடி பணிவோம் அத்தனே உம்மை நாம் சிந்திக்க சிந்திக்க எத்துணை எம்முள்ளம் கனிந்திளகுதே உம்மை நாம் ஆராதிக்கின்றோம் தேவனே உம்மை நாம் என்றும் நேசிப்போம் அன்பனே உம்மை நாம் விசுவசிப்போம் போதரே எம்மை நீர் ஆளுவீர் எங்கள் ராஐனே அப்பத்தின் வருணம் உருசி ஸ்பரிசம் இப்போது தோன்றினும் ஈதப்பம் இல்லையே அப்பமுன் மேனியாய் முற்றிலும் மாறிற்றே தப்பில்லாச் சத்தியம் நின்வாக்கு ஈதன்றோ மறைந்து போனதே குருசில் தேவத்வம் மறைந்த தேயிங்கு மனிதத் தன்மையும் விஸ்வசித் திவ்விரு சத்தியம் தன்னையும் விமலா கேட்கின்றோம் நற் கள்வன் கேட்டதை எம் பிரான் மரண ஞாபக சின்னமே இம்மை வாழ் மக்களின் சீவிய விருந்தே வரம் தா உன்னை நான் எப்போதும் நினைந்து பரம ஆனந்தம் கொண்டு மகிழவே அன்புள்ள பெலிகான் ஆன எம் ஆண்டவா எம்பாவக் கறையை நீக்குமுன் ரத்தத்தால் உந்தனின் ஓர் துளி ரத்தமே போதுமே உன்னத பூலோக மாசெல்லாம் போக்கவே உந்தனின் காயங்கள் காண்கிறோம் தோமை போல் என்றிடின் உனை எம் ஆண்டவன் என்கிறோம் எந்தையே உனை நான் அதிகம் அதிகம் என்றுமே நம்பியே சிந்திக்கச் செய்வீரே சேசுவே மறைவாய் இங்குமைக் காண்கின்றேன் நேசரே ஆசையாய் ஒன்றுமைக் கேட்கின்றேன் நின்னெழில் வதனம் நேரில் ஓர் தினமே கண்டுளம் பூரித்தே ஆனந்தங் கொள்ளவே |