Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் 1195-அடைக்கலம் தருகின்ற நாயகனே  
அடைக்கலம் தருகின்ற நாயகனே
அருள் மழை பொழிகின்ற தூயவனே
அடைக்கலம் எனக்கு நீயல்லவோ
அன்புக்கு நீயொரு தாயல்லவோ - 2 (2)


தெய்வீக நீதியின் கதிரவனே
தீமைகள் போக்கும் காவலனே (2)
ஏழையின் கண்களைப் பாராயோ
என்னென்ன கவலைகள் தீராயோ

அருள் ஒளி உண்டு உன் விழியினிலே
ஆறுதல் உண்டு உன் மொழியினிலே (2)
பெருந்துயர் காப்பதுன் கரமல்லவா
பிறந்து நான் வாழ்வதுன் வரமல்லவா

அணையாத விளக்கு எரிவதனால்
அன்பரின் உள்ளம் தெரிவதனால் (2)
இறைவனே உனது துணை என்று
இதயத்தில் நினைத்தேன் நான் இன்று


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!