நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1193-ஆரா இன்பத் அமுதே |
ஆரா இன்பத் அமுதே போற்றி தேறாதோர்க்குத் தெளிவே போற்றி அரசே போற்றி அன்பா போற்றி நிருபா போற்றி நேயா போற்றி ஆதியே போற்றி அறிவே போற்றி சோதியே போற்ற சுடரே போற்றி ஐயா போற்றி அமலா போற்றி மெய்யா போற்றி மேலா போற்றி எந்தாய் போற்றி இறைவா போற்றி நந்தாக் காதல் நாதா போற்றி தாயுமான தயாளா போற்றி நேயம் கூறும் நிரந்தா போற்றி வேந்தர்க்கெல்லாம் வேந்தே போற்றி மாந்தர்க்கெல்லாம் மன்னா போற்றி நாயகா போற்றி நண்பா போற்றி மீயகம் நல்கும் மேலாய் போற்றி கோனே போற்றி குருவே போற்றி ஞானா போற்றி நடுவா போற்றி வேதா போற்றி விமலா போற்றி போதா போற்றி புனிதா போற்றி |