Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் 1193-அருள் தாரும் யேசுவே  

அருள் தாரும் யேசுவே
சுகம் பெறுவேன் யேசுவே
ஒருவார்த்தை பேசுமே
என் வாழ்வு நலமாகுமே
ஆராதனை ஆராதனை ஆராதனை செய்கின்றோம்

தாவீதின் திருமகனே
தயைகூர்ந்து இரங்குமையா
கடைக்கண்ணால் எமைப்பாருமே
கருணைக்கடல் யேசுவே
ஆராதனை ஆராதனை ஆராதனை செய்கின்றோம்

மெய்தொடுவாய் யேசுவே
நோய் களைவேன் யேசுவே
ஆசீரளிப்பாய் யேசுவே
மீட்புப் பெறுவேன் யேசுவே
ஆராதனை ஆராதனை ஆராதனை செய்கின்றோம்

மார்போடு அணைத்துக் கொண்டு
மன்னித்து வாழ்வுதரும்
பேரன்பே உன் பாதத்தில்
என் முத்தம் ஏற்றுக் கொள்ளும்
ஆராதனை ஆராதனை ஆராதனை செய்கின்றோம்


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!