நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1191-அமைதிப்புறா பறக்கட்டுமே |
அமைதிப்புறா பறக்கட்டுமே ஆண்டவன் நாமத்திலே பகைமை காயங்கள் ஆற்றிடவே நாமும் புறப்படுவோம் வேதனை வெறுப்புக்கள் சேர்ந்தாலும் அன்பினில் புதிய பாதையுண்டு மன்னிப்பில் மனிதரை வென்றெடுத்தால் மீண்டும் மனிதம் தோன்றிடுமே ஆயுதம் போர்க்கொடுமை - அங்கு குடும்பங்கள் சிதைந்திடுமே எழுந்து புறப்படு தேவன் நாமத்தில் நீதியின் தூதுவனாய் எழுந்து புறப்படு இறைவன் நாமத்தில் அமைதியின் தூதுவனாய் கண்ணீர் கவலைகள் தொடர்ந்தாலும் இருளின் செயல்கள் விலக்கிடுவோம் பகிர்தலில் சமத்துவம் விதைத்திடுவோம் நம்பிக்கை மரமாய் அது வளரும் உரிமைக்காய் உயரும் கரம் - இந்த உலகினை முறைப்படுத்தும் இன்று விழித்தெழு இறைவன் நாமத்தில் விடியலின் விளைநிலமாய் வென்று ஒளிர்ந்திடு தீமை நீங்கிடும் நானிலம் வாழ்வு பெற |