Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் 1190-அமைதி இழந்த என் ஆன்மா  
அமைதி இழந்த என் ஆன்மா பாடும் சங்கீதம் - நீ
அருகிலிருந்தால் வாழ்வில் என்றும் சந்தோசம்
என் வாழ்வே சிறு கதை தானே - அதில்
சோகம் தொடர் கதை தானே இறைவா இறைவா
என்னோடு நீ வந்து பேசிட வேண்டும்

பகலில் உம்மைக் கூவி அழைக்கின்றேன்
இரவில் நான் புலம்பி அழுகின்றேன் - 2 -என்
கைகளும் இங்கே தளர்ந்தன - என்
கால்களும் வலுவினை இழந்தன - 2
என் குரல் கேட்பாயோ இறைவா
என் செபம் கேட்பாயோ

வசந்தம் என்னை விலகிப் போனது
வருத்தம் என்னை வாட்டுகின்றது - 2 - என்
நண்பரும் என்னைப் பிரிந்தனர்
என் உறவினரும் என்னைப் பகைத்தனர் - 2
என் நிலை பாராயோ இறைவா
என்னுயிர் காப்பாயோ



 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!