Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(10) 2 சாமுவேல்

 
1. தான் சவுல் அரசனை கொன்றதாகப் பெருமையுடன் பேசியவரை
    கொலை செய்யுமாறு தாவீது கட்டளையிட்டது ஏன்?

    அவன் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரை கொலை 
    செய்ததால்.(1:14)

2. கடவுள் தாவீதை எங்கே கொல்லுமாறு கட்டளையிட்டார்?
     எபிரோன். (2:1)

3. எபிரோனில் நடந்தது என்ன?
    யுதாவில் மக்கள் வந்து தங்கள் குலத்தின் அரசராகத் தாவீதை 
    திருப்பொழிவு  செய்தனர். (2:4)

4. சவுலின் படைத்தலைவன் யாரை அரசராக ஏற்படுத்தினான்?
    சவுலின் மகன் இஸ்பொசேத்தை. (1:8)

5. அப்னேரும் இஸ்பொசேத்தும் எங்கே போர் மூண்டனர்?
    கிப்யோன். (2:12)

6. எபிரோனில் தாவீதுக்கு எத்தனை மகன்கள் பிறந்தனர்?
    ஆறு (3:5)

7. அப்னேர் இஸ்பொசேத்தோடு போர் செய்தது ஏன்?
    இஸ்பொசேத் சவுலின் வைப்பட்டியை வைத்திருந்ததால். (3:7)

8. இஸ்பொசேத்தோடு உடன்படிக்கை செய்து கொள்ள தாவீது கேட்ட  
    நிபந்தனை என்ன?

    சவுலின் மகன் மீக்காவை திருப்பித் தர வேண்டும்.(3:13)

9. அப்னேரைக் கொலை செய்தது யார்?
     யோவாபு (3;:30)

10. யோவாபு அப்னேரைக் கொலை செய்தது ஏன்?
      தன்னுடைய சகோதரன் அசாவேலைக் கொன்றதால் (3;:30)

11. சவுலின் மகன் இஸ்பொசேத்தைக் கொன்றது யார்?
      இரேக்காவும், பானாவும் (4:5)

12. இரேக்காவும், பானாவும் இஸ்பொசேத்தின் தலையை தாவீதிடம்  
      கொண்டு வந்துபோது, தாவீது அவர்களுக்கு அளித்த தண்டனை
      என்ன?

     தாவீது தம் பணியாளர்களைக் கொண்டு அவர்களைக் கொன்றார்.  
     (4:12)

13. தாவீது யுதாவுக்கும், இஸ்ராயேலுக்கும் அரசராக எங்கே   
      நியமிக்கப்பட்டார்?

      எபிரோனில். (5:3)

14. தாவீது யுதாவுக்கும், இஸ்ராயேலுக்கும் அரசராகும்போது    
      அவருக்கு வயது என்ன?

      30 வயது (5:4)

15. தாவீது எபிரோனில் தங்கி எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்?
      ஏழு ஆண்டுகள், ஆறு மாதங்கள்.(5:5)

16. தாவீது எருசலேமில் தங்கி எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்?
      33 ஆண்டுகள் (5:6)

17. எருசலேமின் மைந்தர்கள் யாவர்?
      ஏபூசியர் (5:6)

18. தாவீது எருசலேமை ஆட்கொண்டாரா?
      ஆம், தாவீது கோட்டையில் தங்கி அங்கு தாவீது நகர் எனப் 
        பெயரிட்டார்;.(5:9)

19. தாவீதுக்கு அரண்மனையைக் கட்ட மரங்களையும்,  
      தச்சர்களையும் அனுப்பியது யார்?

      தீர் மன்னன் ஈராம். (5:11)

20. தாவீது 30பேரை ஒன்று கூட்டி பாலைக்கு சென்றது ஏன்?
      கடவுளின் பேழையைக் கொண்டுவர (6:2)

21. தாவீது ஆண்டவரின் பேழையை எருசலேமுக்கு கொண்டுவர 
      மறுத்தது ஏன்?

     ஆண்டவர் உசாவைக் கொன்றதால் தாவீது கடவுள்மேல் சினம்   
     கொண்டிருந்தார். (6:7)

22. ஆண்டவரின் பேழை எங்கே வைக்கப்பட்டது?
      ஒபேது ஏதோமின் இல்லத்தில். (6:11)

23. தாவீது ஆண்டவரின் பேழையை எருசலேமுக்கு எப்போது  
       கொண்டு வந்தார்?

       மூன்று மாதங்களுக்குப் பிறகு (6:11)

24. தாவீது தன்னுடைய மகிழ்ச்சியை எவ்வாறு வெளிப்படுத்தினார்?
     ஆண்டவரின் பேழை முன்பாக நடனமாடினார். (6:14)

25. தாவீதின் செயலை இழிவாகப் பேசியது யார்?
      அவரின் மனைவி மீக்கால். (6:16)

26. ஆண்டவர் மீக்காலை எவ்வாறு தண்டித்தார்?
     அவருக்கு சாகும் வரை குழந்தைப்பேறு இல்லாமல் செய்தார் (6:23)

27. ஆண்டவரின் பேழைக்கு கோவில் கட்ட தாவீதுக்கு அனுமதி 
       வழங்கப்பட்டதா?

       இல்லை (7:13)

28. தாவீதின் படைத்தலைவராக இருந்தவர் யார்?
      யோவாபு. (8:16)

29. ஆவணக்காப்பாளராக இருந்தவர் யார்?
      யோசபாத்து (8:16)

30. தாவீதின் குருக்களாக இருந்தவர் யார்?
      சதோக்கும், அபியாத்தாரும். (8:17)

31. செயலராகப் பணியாற்றியவர் யார்?
      சேராயா(8:17)

32. தாவீது இரக்கம் காட்டிய யோனத்தானின் மகன் யார்?
      மெபிபொசேத்து (9:6)

33. தாவீது மெபிபொசேத்துக்கு எவ்வாறு இரக்கம் காட்டினார்?
      சவுலின் நிலம் அனைத்தையும் அவருக்கு கிடைக்கச் செய்தார்.

34. தாவீது அமோனியரை எதிர்த்து போரிடக் காரணம் என்ன?
      தன் பணியாட்களை அவமானப்படுத்தியதால். (10:4)

35. அம்மோனியரைத் தோற்கடித்தது யார்?
      யோவாபு. (11:1)

36. உரியாவின் மனைவியின் பெயர் என்ன?
       பத்சேபா. (11:3)

37. தாவீது செய்த குற்றம் என்ன?
     பத்சேபாவுடன் உடலுறவு  கொண்டு உரியாவைக் கொன்றது. (11:4)

38. தாவீது உரியாவைக் கொன்றது எப்படி?
      உரியாவைக் கடுமையாய் நடக்கும் போருக்கு முன்னிலையில் 
      நிறுத்தினார்; (11:15)

39. தாவீதுக்கும், பத்சேபாவுக்கும் பிறந்த மகனின் பெயர் என்ன?
      சாலமோன். (12:24)

40. தாவீதின் குற்றத்தை எடுத்துச் சொல்ல ஆண்டவர் யாரை
     அனுப்பினார்?

      நாத்தானை. (12:1)

41. தன்னுடைய குற்றத்தை அறிந்த தாவீது என்ன பதில் கூறினார்?
      நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்து விட்டேன்.(12:13)

42. தாமார் என்பவர் யார்?
      அப்சலோமின் சசோதரி (13:1)

43. அம்னோன் என்பவர் யார்?
      தாவீதின் இன்னொரு மகன். (13:1)

44. அம்னோனின் ஆசை என்ன?
      தாமாரை மனைவியாக்கிக் கொள்ள ஆசைப்பட்டார். (13:2)

45. தாமோர், அம்னோனுக்கு உணவளிக்கச் சென்றபோது அவர்  
      அவளை என்ன செய்தார்?

      அவர் அவளை கற்பழித்தார். (13:14)

46. அப்சலேம் அம்னோனை எப்படி பழிவாங்கினார்?
      அம்னோனைக் கொன்றார்.(13:32)

47. அம்னோனைக் கொன்ற பிறகு அப்சலோம் என்ன செய்தார்?
      கெசுருக்கு சென்றான். (13:37)

48. அம்னோன் கெசுரில் எவ்வளவு காலம் தங்கியிருந்தார்?
      மூன்று ஆண்டுகள்.(13:18)

49. அவரைத் தாவீதிடம் அழைத்து வந்தது யார்?
      யோவாபு. (14:13)

50. நான்கு ஆண்டுகளுக்குப்பிறகு அப்சலோம் என்ன செய்தார்?
      எபிரோனில் அரசரானார். (15:10)

51. தன் மகனின் செய்தி அறிந்த தாவீது என்ன செய்தார்?
      அரசரும் அவர் வீட்டாரும் எருசலேமை விட்டு வெளியேறினர்.
      (15:16)

52. அப்சலோமை உளவு  பார்க்க தாவீது யாரை அனுப்பினார்?
      ஊசாய் (15:37)

53. அப்சலோமுக்கும் தாவீதின் படை வீரர்களுக்கும் இடையே எங்கே  
       போர் நடந்தது?

       எபிராயிம் காட்டில். (18:6)

54. இந்தப் போரின் முடிவு என்ன?
      20,000 பேர் கொல்லப்பட்டனர்.(18:7)

55. அப்சலோம் எவ்வாறு இறந்தார்?
      அப்சலோம் போரில் இருந்து தப்பி ஓடும்போது, கருவாலி மரத்தில் 
      சிக்கிக் கொள்ள, யோவாபு அவனது நெஞ்சில் ஈட்டியால் குத்தி 
       சாகடித்தான்.(18:9,14,15)

56. தனது மகனின் இறப்பில் தாவீது சந்தோசமடைந்தாரா?
      இல்லை, தனது மகனுக்காக அழுது புலம்பினார்.(19:1)

57. இஸ்ராயேலில் எவ்வளவு காலமாக பஞ்சம் நீடித்தது?
       மூன்று ஆண்டுகள். (21:1)

58. தாவீதின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவு என்ன?
      800,000 பேர் இஸ்ராயேலிலும், 500,000 பேர் யுதாவிலும் 
      இருந்தனர்.(24:9)
 

அம்மா என்று அழைக்கும்போது, மகனே என்று ஓடி வந்து
கலங்கிய என்னைக் கரம் பிடித்தாய்.