| மாதாபாடல்கள் | கரையை தேடும் அலைகளே |
|
கரையை தேடும் அலைகளே கன்னி மரி புகழ் பாடுங்களே கர்த்தரை கருவில் சுமந்தவள்! காலமெல்லாம் நம்மை காப்பவள் (2) உலகை சுமந்தவள் உணர்வை மதிப்பவள் தாய் அன்பு நிறைந்தவள் என்னை சேய் போல பார்ப்பவள் உறவை இழந்து வாடும் உயிர்கள் மரியின் பிள்ளைகளே மனிதர் வெறுக்கும் மனங்களெல்லாம் மரியின் சொந்தங்களே 2 உலகின் செல்வத்தில் உறுதி இல்லை மரியின் அன்புக்கு இறுதி இல்லை உலகின் சொந்தங்கள் தொடர்வதில்லை. மரியின் பந்தத்தில் பிரிவு இல்லை. உண்ர்ந்து கொள்ளுங்களே. திரும்பி வாருங்களே விஞ்ஞானம் சொல்லும் உலகின் உண்மையை நம்பிடும் மனிதரே தேவத்தை சுமந்த மரியின் பெயரை நம்பிட மறுப்பதேன் (2) ஜாதி மதங்கள் கடந்தும் கூட மரியின் பெருமை தெரியுதே புதுமை பலவும் நடப்பதாலே மரியின் கருணை புரியுதே உணர்ந்துகொள்ளுங்களே திரும்பி வாருங்களே |