Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1014-வேறென்ன வேண்டுமம்மா  
வேறென்ன வேண்டுமம்மா - எனக்கு
வேறென்ன வேண்டுமம்மா - 2

அருள் வாழ்வை காத்து வந்தால்
அதுவே போதுமம்மா - 2
அருட் சுனையாக நீ இருந்து வந்தால்
அதுவே போதுமம்மா - 2
போதுமம்மா போதுமம்மா

சோதனை நேரம் நிற்பாய்
அதுவே போதுமம்மா - 2
சாத்தானைக் காலினால் மிதித்து விட்டால்
அதுவே போதுமம்மா - 2
போதுமம்மா போதுமம்மா

பாவத்தின் வலையறுத்தால்
அதுவே போதுமம்மா - 2
பாவியின் உள்ளம் நீ புரிந்து கொண்டால்
அதுவே போதுமம்மா - 2
போதுமம்மா போதுமம்மா

துன்பமாம் புயலை வென்றால்
அதுவே போதுமம்மா - 2
துயரமாம் சுமையை நீ தாங்கிக் கொண்டால்
அதுவே போதுமம்மா - 2
போதுமம்மா போதுமம்மா

சாவின் நேரம் நிற்பாய்
அதுவே போதுமம்மா - 2
தேவனின் நாட்டிலே கொண்டு சேர்த்தால்
அதுவே போதுமம்மா - 2
போதுமம்மா போதுமம்மா 2

 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா