Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1012-விடியலைத் தேடும்  


விடியலைத் தேடும் நெஞ்சங்களே
விடியாக் கனவின் சொந்தங்களே
நமக்கொரு தாய் இருக்கின்றாள்
வாருங்கள் அவளிடம் செல்வோம் (2)

இருள் சூழும் உலகினிலே
ஒளிதேடி அலையுது நெஞ்சம்
கீழ்வானம் சிவக்குமென்று
உறங்காது ஏங்குது நெஞ்சம் (2)
தாயவள் அழகு பொற்சித்திரம்
கீழ்வானின் நம்பிக்கை நட்சத்திரம்
நட்சத்திரம் - 2

புயலாக துன்பங்களும்
இதயத்தின் கரையினில் மோதும்
மலராத மொட்டுகளாய்
இதயத்தில் இன்பங்கள் வாழும் (2)
வாழ்வினில் என்றும் போராட்டமே
தாயவள் அன்பில் தேரோட்டமே
தேரோட்டமே என்றும் தேரோட்டமே

 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா