Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1011-வெள்ளி நிலா ஓடத்திலே.  


வெள்ளி நிலா ஓடத்திலே..... வீற்றிருக்கும் தாய்மரியே (2)
துள்ளி வரும் துன்ப அலை வந்து என்மேல் மோதுதம்மா
வெள்ளத்திலே மூழ்குகிறேன் வேதனையில் வாடுகிறேன்
அள்ளி என்னைக் கரை சேர்க்க அருட்கரத்தைத் தாருமம்மா

அன்னை என்றும் தந்தை என்றும் உறவு சொல்லி வந்தவர்கள்
அன்பு மொழி பேசி என்னைப் பயன்படுத்திக் கொண்டவர்கள் (2)
இன்னலிலே தவிக்க விட்டு எனை மறந்து போகும்போது (2);
அன்னை என்று உனை அழைத்தேன் அருட்கரத்தைத் தாருமம்மா

கோயிலிலே குடியிருப்பாய் என்று நான் நம்பி வந்தேன்
வாயிலிலே காவல் நின்றாய் வழி நெடுக நீயும் வந்தாய் (2)
பாயினிலே படுத்திருந்தேன் பக்கத்திலே அமர்ந்திருந்தாய் (2)
தாய் என்று தாவுகிறேன் அருட்கரத்தைத் தாருமம்மா
 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா