1110-வியாகுல மாமரியே |
வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே சிலுவை அடியினிலே சிந்தை நொந்தழுதாயோ பன்னிரு வயதில் ஆலயத்தில் அன்று அறிஞர்கள் புகழ்ந்தவரை கரங்களை விரித்தே கள்வனைப்போல் கழுமரத்தினில் கண்டதனால் திருமணப் பந்தியில் கனி ரசமே அன்று அருளிய திருமகனை குருதிசிந்தி கடற்காடியினை இன்று பருகிடக்கண்டதனால் கண்ணீர் சிந்திய மனிதருக்கு அருள் பண்ணிய திருமகனை மண்ணவர்க்காகத் தன்னுயிரை இன்று மாய்த்திடக் கண்டதினால் |