1009-விண்ணின் அருளை நிதம் |
விண்ணின் அருளை நிதம் பொழியும் செபமாலை ராக்கினியே - உம்மை வணங்கிடுவோம் பாமாலை சூட்டுவோம் உம்மை நாம் புகழ்ந்தே பணிந்திடுவோம் அகிலமெல்லாம் நிறைந்தது கலகம் அழிவுறும் பாதையில் சென்றது உலகம் அதனைக்காக்க அருளினைப் பொழியும் செபமாலை தந்தாயே (2) அன்னையே அலையினில் ஆடும் மரக்கலம் போல அமைதியில்லாமல் அலைந்தோம் வாழ்வில் அமைதியின் நிறைவே அன்னை மாமரியே ஆதரிப்பாய் எம்மையே (2) அன்னையே |