Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1008-வான் லோக ராணி  
வான் லோக ராணி வையக ராணி
மண் மீதிலே புனித மாது நீ

விண்ணொளிர் தாரகை தாயே நீ
தண்ணொளிர் நேத்திரியே ஆரணி
பாவமேதும் இல்லா சீலி
பாவிகளின் செல்வ ராணி
பாதுகாத்து ஆளுவாயே நீ - 2

ஜென்ம மாசில்லா மாதரசி
செம்மை சேர் மங்கையர் ராணி நீ
பாவமேதும் இல்லா சீலி
பாவிகளின் செல்வ ராணி
பாதுகாத்து ஆளுவாயே நீ - 2

வானேறும் வாசலே மாமரி
வாழ்த்துவோம் எம்மை நீ ஆதரி
பாவமேதும் இல்லா சீலி
பாவிகளின் செல்வ ராணி
பாதுகாத்து ஆளுவாயே நீ - 2




 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா