Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1105-வன்னித்திருப்பதியினிலே  


வன்னித்திருப்பதியினிலே கோவில் கொண்ட இனியவளே
கன்னிமரி மாதாவே மருதமடுத் தாயவளே (2)
அடைக்கலமும் ஆதரவும் புகலிடமும் உன் பதியே
அண்டி வந்தோம் நாங்களம்மா
உன்னருளால் காத்தருள்வாய் - அம்மா

தொல்லைகளால் சீரழிந்து தத்தளிக்கும் வேளையிலும்
பிள்ளைகளை நாமிழந்து பேதலிக்கும் வேளையிலும்
ஊரிழந்து உறவிழந்து ஊசலாடும் வேளையிலும்
மருதமடு மாதாவே சேர்த்தணைத்துக் காத்தருள்வாய் - அம்மா

பச்சை இளம் பிஞ்சுகளின் பசிக்கொடுமை பாரம்மா
பந்தம் சொந்தம் பறிகொடுத்து பதறுகிறோம் நாமம்மா
வெந்த புண்ணின் வேதனையும் நொந்த குரல் கேளம்மா
வந்தோம் உந்தன் சந்நிதிக்கு வேண்டும் குரல் கேளம்மா அம்மா





 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா