Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் அருள் நிறை மரியே வாழ்க
அன்னையே ........ அழகுருவே நீ வாழ்க
கன்னியே ........... கவி நிலவே நீ வாழ்க
அமைதியை தந்தாய் வாழ்க மனநிறைவாய் வந்தாய் வாழ்க

அருள் நிறை மரியே வாழ்க அகவொளி தருபவளே
ஆகட்டும் என்றொரு வார்த்தையினாலே
அகிலத்தை ஆள்பவளே
அன்னையே அழகுருவே நீ வாழ்க
கன்னியே கவி நிலவே நீ வாழ்க
அமைதியை தந்தாய் வாழ்க - மன
நிறைவாய் வந்தாய் வாழ்க

இறைவன் மகனை கருவில் சுமந்த புதுமை அன்னையும் நீயே
சிலுவை அடியினில் உலகின் அன்னையாய் பிறந்த மாமரி நீயே
வறுமையின் பிடியை உடைப்பாய் பகிர்வை எம்மில் விதைப்பாய்
சிறுமைகள் சிதறச்செய்வாய் பெருமைகள் மலர அருள்வாய்

மாசில்லாத அன்னையாய் நீ மனிதம் மாண்புறச் செய்தாய்
துயரில் வாடும் மாந்தர் எமக்கு துணையாய் வாரும் தாயே
இருளை போக்கும் ஒளியாய் நல் இன்பம் பெருகும் சுனையாய்
பாவம் போக்கும் வழியாய் எம் வாழ்வில் எங்கும் ஒளிர்வாய்






 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா