Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் பனியில் பூத்த சூரியனே  

பனியில் பூத்த சூரியனே
கன்னி மரியின் பாலகனே - 2
வானோர் வாழ்த்தும் வானவனே
மாந்தர் ஏத்தும் மன்னவனே
இந்த புனிதநாள் உன் பிறந்தநாள்
புவியில் மாந்தர் மகிழும் நாள் - 2

1
வானோர் வாழ்த்தும் பாடல் கேட்டு துயிலாய் பாலகனே
வானகம் துறந்து மாடடை குடிலில் பிறந்த பாமரனே - 2
கந்தைக்கோல கண்மணியே
விந்தையான பொன்மணியே
நிந்தை மாற்ற வந்தவனே
எந்தையாகி நின்றவனே - இந்த புனிதநாள்

2
இடையரோடு இகமே மகிழும் செய்தி ஆனவனே
ஞானியர் உன்னடி வந்திட செய்யும் விண்மீன் ஆனவனே - 2
ஆயர் இசைக்கும் இன்னிசையே
பாரோர் பாடும் பண்ணிசையே
மனதை மயக்கும் புன்சிரிப்பே
புவியை ஆளும் என்னரசே -இந்த புனிதநாள்






 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா