| கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | புத்தம் புதிய மலரே |
|
புத்தம் புதிய மலரே - இந்த புவியில் உதித்த நிலவே புதிய உலகின் விடிவே - எங்கள் இதயம் தேடும் மகிழ்வே(2) ஆராரோ ஆரிரரோ ஆரிரராரோ(2) என்றும் வாழும் இறைமகனே உலகில் வந்தாயே இன்று எங்கள் உடன் பிறப்பாய் மாறிவிட்டாயே(2) கண்ணின் மணியே கனியமுதே கண்வளராயோ(2) அன்பின் மகிமை உணர்ந்த எம்மை அன்பில் இணைப்பாயோ பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணைந்தே பாடுவோம் மனிதனே மழலையே மகிழ்ந்தே ஆடுவோம் பிறந்தநாள் வாழ்த்துக்கள்(2) ஈழவானில் எழும் கதிரே எங்கள் நம்பிக்கையே தாழ்த்தப்பட்டோர் தவித்து நிற்போர் வாழ்த்தும் உன் வரவே(2) துன்ப துயரம் துடைக்க வந்த கடவுளின் கரமே(2) உளமகிழ்வே இகம் முழங்கும் இன்னிசை சுரமே பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணைந்தே பாடுவோம் மனிதனே மழலையே மகிழ்ந்தே ஆடுவோம் பிறந்தநாள் வாழ்த்துக்கள்(2) |