| கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | மண்ணில் பிறந்த மானுடமே |
|
மண்ணில் பிறந்த மானுடமே உகந்த காணிக்கை நான் தருகின்றேன் - 2 ஏற்பாயோ நீ ஏற்பாயோ - 2 என் இனிய காணிக்கை ஏற்பாயோ எளிய இதயத்தில் புதிய நினைவினில் உகந்த காணிக்கை நான் தந்திடுவேன் கருணை இதயத்தில் பரந்த மனத்தினில் உகந்த காணிக்கை நான் தந்திடுவேன் ஏற்பாயோ நீ ஏற்பாயோ என் இனிய காணிக்கை ஏற்பாயோ மண்ணில் பிறந்த மானுடமே உகந்த காணிக்கை நான் தருகின்றேன் - 2 உடல் பொருள் ஆவியை உவந்தளிக்கின்றோம் உவப்புடன் ஏற்பாய் என் இறைவா பிறப்பின் உணர்வினில் நாளும் இணைந்திட எம்மையே பலியாய் தருகின்றோம் ஏற்பாயோ நீ ஏற்பாயோ என் இனிய காணிக்கை ஏற்பாயோ மண்ணில் பிறந்த மானுடமே உகந்த காணிக்கை நான் தருகின்றேன் - 2 ஏற்பாயோ நீ ஏற்பாயோ - 2 என் இனிய காணிக்கை ஏற்பாயோ |