Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் மணியோசை கேட்டிடவே  

மணியோசை கேட்டிடவே மன்னர் இங்கு பிறக்கிறார்
வாருங்கள் வாருங்கள் ஒன்று கூடுவோம் -2
வார்த்தையான இறைவன் இன்று வாழ்வளிக்க வருகிறார்
வானவரின் வாழ்த்துக்களை வாழ்வாக்குவோம்
எழுந்திடு மனமே விரைந்திடு தினமே
நினைத்திடு கணமே இது இறைத்திருவுளமே -2
மணியோசை கேட்டிடவே மன்னர் இங்கு பிறக்கிறார்
வாருங்கள் வாருங்கள் ஒன்று கூடுவோம் -2

1.அன்பாலே அரவணைத்திடுவோம்
அருளாசீரால் அகமகிழ்ந்திடுவோம்
இறைப்பிறப்பில் இணைந்திடுவோம் நாம்
இன்று ஈகையுடன் ஈசனின் பிறப்பில் -2

2.விண்மீனின் வழி சென்றிடுவோம்
நாம் விண்வாழ்வின் வழி கண்டிடுவோம்
விண்ணரசுன் விதையாவோம் நாம்
இன்று விண்ணவனின் மண்ணக பிறப்பில் -2







 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா