Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் கோதுமை மணியே, தூய கனியே  


கோதுமை மணியே, தூய கனியே
கண்ணே கண்ணுறங்கு!
திராட்சை கொடியே, ஈசாய் கிளையே
கண்ணே கண்ணுறங்கு
அன்னை மரியின் தங்கமே தங்க கொடியே! கண்ணுறங்கு-அன்பு
தந்தையின் உயிரே உயிர் வரமே!
கண்ணுறங்கு கண்ணுறங்கு!
தேவ பாலா! கண்ணுறங்கு!
கண்ணுறங்கு கண்ணுறங்கு
இயேசு பாலா!கண்ணுறங்கு!

1) தந்தையின் மகிமை கைவிடாமல்
கன்னி மரியிடம் கருவானவா!
கண்ணுறங்கு தேவ பாலகா!
Ch: அமுத விழியே! அருளின் நதியே!
வாழ்வின் வழியே! கண்ணுறங்கு!
தந்தை மடியை விலகிடாமல்
கன்னி மடியில் சிசுவானவா!
கண்ணுறங்கு இயேசு பாலகா!
வானின் வரமே! வாழ்வின் ஒளியே!
உயிரின் நிழலே! கண்ணுறங்கு!
என் இதயம் உருகுதே! உன் பிறப்பு கேட்கையில்
எந்தன் கண்கள் நனையுதே உன் குடிலை பார்க்கையில்
என்னை மீட்க வந்து வெறுமையான
தூய பாலகா
என் அழுகை துடைக்க அடிமையான
புனித பாலகா!

2) உலகம் தேடும் அமைதி இன்று
உந்தன் பிறப்பில் தொடங்குதே!
கண்ணுறங்கு தேவ பாலகா!
Ch: பனித்துளியே! பால் நிலவே!
வான்மலரே கண்ணுறங்கு!
பாவ உலகை காண வந்த
பாதி மனித,பாதி தேவா
கண்ணுறங்கு இயேசு பாலகா!
Ch: பொன் முகமே! பொற்கனியே!
தேன் சுவையே! கண்ணுறங்கு!
எந்தன் உயிர் நடுங்குதே
உன் சிலுவை நினைக்கையில்
எந்தன் உள்ளம் உடையுதே
பிஞ்சு விரல் பார்க்கையில்
என் பாவம் சுமக்க, பசியாய் வந்த
தூய பாலகா பாலகா!
என் வறண்ட நெஞ்சில் மழையாய் வந்த
புனித பாலகா







 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா