| கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | என் ஆன்மா ஆண்டவரை |
|
தேவதாயின் புகழ்க் கீதம் ======================== என் ஆன்மா ஆண்டவரை மகிமைப்படுத்துகின்றது என் மீட்பராம் இறைவனிடம் என் மனம் மகிழ்கின்றது தன்னடிமை தாழ்மையினை அவர் கருணைக்கண் கொண்டதினால் இதோ எல்லாத் தலை முறைகளும் என்னைப் பாக்கியவதி என்பார்; ஏனெனில் வல்லபமுள்ளவர் எனக்குப் பெரியன புரிந்தார்; அவர் பெயர் புனிதமானதாம் அவருடைய கிருபையும் தலை முறை தலை முறையாய் அவருக்குப் பயந்து நடப்போர்க்கே தன் கரத்தின் வலிமை காட்டி இருதய சிந்தனையில் கர்வமுள்ளோரைச் சிதறடித்தார்; வல்லபமே உள்ளோரை அவர் இருக்கையில் இருந்து தள்ளி தாழ்ந்தோரை உயர்த்தினார்; பசித்தேதான் இருப்பவரை அவர் நன்மைகளால் நிரப்பி தனவான்களை வெறுமையாக அனுப்பினார்; தன் கிருபையை நினைவு கூர்ந்து தம் தாசராம் இஸ்ராயேலைக் காத்திட்டார்; நம் அரும் பிதாப்பிதாக்களாம் ஆபிரகாமுக்கும் ஊழியுள்ள காலம் அவரது வித்துக்கும் அவர் தந்த வாக்குறுதி அதுவேயாம் பிதாவுக்கும் சுதனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆதியிலிருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமேன் |