Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் பெத்தலகேம் ஊரோரம்  

பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்
பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்
கர்த்தன் ஏசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி..ஓடி..

எல்லையில்லா ஞானபரன் - வெல்ல
மலையோரம் புல்லணையிலே
பிறந்தார் இல்லமெங்கும் ஈரம் - தொல்லை
மிகும் அவ்விருட்டு நேரம்.நேரம்.

வான் புவி வாழ் ராஜனுக்கு -மாட்டகந்தான்
வீடோ வானவர்க்கு வாய்த்த மெத்தை
வாடின புல் பூடோ -ஆன பழங்
கந்தை என்ன பாடோபாடோ

அந்தரத்தில் பாடுகின்றார்
தூதர் சேனை கூடி -மந்தை ஆயர்
ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த மோடிமோடி

ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர்
மகிமை கண்டு -அட்டியின்றி
காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
நாட்டமுடன் இரட்சகரை கண்டுகண்டு.







 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா