Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் அந்த மாடு அடையும்  

அந்த மாடு அடையும் குடிலினிலே
எங்க மன்னவரு பிறந்திருக்காரு

     வாங்க வாங்க வாழ்த்திடுவோம்
     வாழ்த்து சொல்லி பாடிடுவோம்

விண்ணை விட்டு மண்ணில் வந்த இயேசு ராஜனே
கண்ணுறங்க உந்தனுக்கு புல்லணைதானே

1. ஏதேனின் சாபம் தீர தேகத்தின் பாவம் போக்க
ஈசாயின் அடி மரம் துளிர்த்ததுவே
மானிடனாக பிறந்தாரே
விண்ணை விட்டு மண்ணில் வந்த இயேசு ராஜனே
கண்ணுறங்க உந்தனுக்கு புல்லணைதானே

2. எந்தனை மீட்கவே ஏழையாய் வந்தவரே
என் வாழ்வின் பாதையை அறிவீரே
உம்மிலே என்றும் நான் நிலைத்திடுவேன்
விண்ணை விட்டு மண்ணில் வந்த இயேசு ராஜனே
கண்ணுறங்க உந்தனுக்கு புல்லணைதானே





 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா