Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

தேவ தாயின் மாதம்

                                                                  தேவதாயின் மாதம் இதுவல்லவோ

போர்த்துக்கல் நாட்டில் உள்ள பத்திமா  மாதாவின் 100வது ஆண்டு  விழாவின் போது, திருத்தந்தை  வருகை தந்து  நடாத்திய  திருப்பலியின்  நேரடி  ஒலிபரப்பு  பத்திமா நகரத்திலிருந்து....

பாத்திமா மாதாவின் நூறாவது ஆண்டில்
 
மரியன்னைக்கு ஸ்துதிகள்
 
பாத்திமா காட்சி - 3
 
பாத்திமா காட்சி - 6
 
பாத்திமா காட்சி - 7
 
பாத்திமா காட்சி - 8
 
பாத்திமா காட்சி - 9
 
செபமாலையின் வெற்றி
 
பாத்திமாவில் அன்னையின் அழைப்பு
 
மே 13-ஐ நோக்கி.....
 
Dear Lady Fatima
 
தூய பாத்திமா அன்னை
23-10-2017 - பத்திமாவில் மாதாவின் திருவிழா
மே மாதம் நம் தேவதாயின் வணக்கமாதம்.
நாம் குடும்பமாக நம் அன்புத்தாய்க்கு வணக்கம் செலுத்த இருக்கிறோம். அனைத்து பங்கு ஆலயங்களிலும் குடும்பம் குடும்பமாக மாலையில் நற்கருணை ஆசீர் சிறப்பிக்க இருக்கிறோம். இந்த மாதத்தில் திவ்ய நற்கருணை நாதரும் முக்கியம், ஜெபமாலையும் முக்கியம். ஆகவே இரண்டிற்கும் நாம் தயாராகுதல் நல்லது. நம் கத்தோலிக்க வாழ்க்கையில் புண்ணியங்களை அதிகமாக சம்பாதித்தல் மிகவும் முக்கியம். அதுவே நாளைக்கு நம் இறுதித்தீர்வையின்போது நமக்கு உதவும்.

எப்படி சம்பாதிக்கலாம் புண்ணியங்கள்:

1. அதிகமாக திருப்பலிகளில் தகுதியான உள்ளத்தோடு பக்தியோடு
     பங்கேற்றல்

2. அதே போன்று அதிகமாக திவ்ய நற்கருணை ஆசீரிலும் பங்கேற்றல்

3. அதிகமாக ஜெபமாலை ஜெபித்தல், கண்டிப்பாக குடும்ப ஜெபமாலை
    ஜெபித்தல். ஜெபிக்கும்போது முடிந்த வரை அந்த தேவ
     இரகசியங்களை தியானித்தல்

4. நேரம் கிடைக்கும்போதெல்லாம்........
 * சில பரலோக, அருள் நிறை மந்திரங்களை சொல்வது,
 * இயேசுவின் இரத்தம் ஜெயம், 
 * மரியாயே வாழ்க,
 * இயேசு (இயேசு என்று அடிக்கடி உச்சரிப்பதும் மனவல்ய ஜெபம்தான்)
 * இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே என்
   இருதயத்தை தேவரீருடைய இருதயத்திற்கு ஒத்த்தாக்ச்
   செய்தருளும்.
 * இயேசுவின் மதுரமான திருஇருதயமே என் ஸ்நேகிதமாயிரும்
 *  மரியாயின் மாசற்ற இருதயமே எங்கள் இரட்சண்யமாயிரும் 
 * இயேசு மரி சூசை உங்களை நேசிக்கிறோம்.
 * ஆன்மாக்களை காப்பாற்றுங்கள்
   என்பது போன்ற பல மனவல்ய ஜெபங்களை ஜெபிப்பது

5. சிலுவை மற்றும் உத்தரியங்களை அடிக்கடி முத்தி செய்வது

6. தலைவெள்ளி, முதல் சனி பக்திகளை கடைப்பிடிப்பது. அன்றைய
    தினங்களில் ஒரு சந்தி சுத்த போசனங்கள் கடைபிடிப்பது.

7. வாரம் ஒரு நாளாவது சுத்தபோசனம் இருப்பது. உத்தரியம்
    அணிபவர்கள் புதன்கிழமைகளில் கடைபிடிக்கலாம்.

8. நமது அன்றாட சிலுவைகளை பொறுமையோடு ஏற்றுக்கொள்வது.

9. அடிக்கடி இல்லாவிட்டாலும் அவவப்போதாவது ஒறுத்தல்
    முயற்சிகள் செய்வது.

10. நம் தலைவரின் திருப்பாடுகளை அடிக்கடி தியானிப்பது.

11. தினமும் பைபிள் வாசித்தல்.

12. மாதம் ஒருமுறையாவது பாவசங்கீர்த்தனம் செய்தல்

இன்னும் மாதாவின் வணக்கமாதத்தை அதிகமாக திவய நற்கருணை ஆசீரில் பங்கு பெற்றும், அதிகமாக ஜெபமாலைகள் ஜெபித்தும் சிறப்பிப்போம்..

தேவ தாயின் மாதம் இது அல்லவோ..!
இதை சிறப்பாய் கொண்டாடிடவே புறப்பட்டு வாரீர் தோழா!!