Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

செபமாலை

                                                            செபமாலையின் வெற்றி  

 

 செபமாலையின் வெற்றி

மே மாதம் முழுவதும், வணக்கம் மாதா மாதமாக அகில உலக கத்தோலிக்க திருச்சபை சிறப்பிக்கிறது.

இம்மாதத்தில் எல்லா கத்தோலிக்க ஆலயங்களிலும் தினசரி மாலையில் செபமாலையும் நற்கருணை ஆசீரும் நடைபெறும்.

இம்மாதம் மட்டுமல்ல என்றுமே கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் குடும்ப செபத்தில், முக்கியமாக இடம் பிடிப்பது ஜெபமலையாகும்.

ஆனால், மே மாதத்தில் எல்லா மக்களும் ஆலயங்களில் ஒன்று கூடி செபமாலை ஜெபித்து அன்னையை புகழ்வது சிறப்பு.

இவ்வேளையில் செபமாலையை பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம் :

எந்தவிதமான தீவினையினால் பாதிக்கப்பட்டாலும் விசுவாசத்தோடு செபமாலை செபித்தால் விடுதலை கிடைக்கும்.

புனித சுவாமிநாதர் சூலூஸ் நகருக்கு அருகாமையிலுள்ள ஒரு காட்டிற்குள் சென்று மூன்று நாட்கள் கடும் தவம் செய்து இடைவிடாது செபத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அன்னை அவரிடம் "நீர் போதனை செய்யும்போது மக்கள் செபமாலை செபிக்கும்படி சொல்லும்" என்றார்கள்.

இந்த காட்சியின் போது தான் செபமாலை செபிப்பது எப்படி என அன்னை கற்று கொடுத்தார்கள்.

இதுபோல் லூர்து நகரில் பெர்நதெத்துக்கு காட்சி கொடுத்த போது அன்னை கையில் செபமாலை வைத்திருந்தார்கள்.

கி.பி.1571ல் மூண்ட போரில் கிறிஸ்தவர்கள் பக்தியுடன் செபமாலை செபித்ததினால் வெற்றி பெற்றார்கள். ஆகவே 1572 அக்டோபர் 7ம் நாள் போப் 5ம் பத்திநாதர் செபமாலையை திருச்சபையின் செபமென அறிவித்தார்.

1863 கிறிஸ்தவர்களுக்கும் துருக்கியர்களுக்கும் மிகப்பெரிய போர்நடந்தது. கிறிஸ்தவர்கள் தோல்வியின் விளிம்பில் சென்ற போது மக்கள் ஒருமனத்தோடு செபமாலை செபிக்கவே வெற்றிகிடைத்தது. ஆகவே போப் 13ம் கிரகோரியார் செபமாலை அன்னை விழாவை அக்டோபர் 7 என அறிவித்தார். அதனால் அகில உலக திருச்சபையின் விழாபட்டியலில் இவ்விழா இடம் பிடித்தது. இதனால் செபமாலை பக்தி உலகம் முழுவதும் பரவியது.

1858ம் ஆண்டு பெப்ரவரி 11ம் நாள் லூர்து நகரில் பெர்னதெத் என்ற ஏழை சிறுமிக்கு அன்னை காட்சி கொடுத்தார். அதே ஆண்டு சூலை மாதம் 16ம் நாள் முடிய அன்னை 18 முறை அச்சிறுமிக்கு காட்சி கொடுத்திருக்கிறார். பெர்னதெத் செபமாலை மணியை ஒன்றன் பின் ஒன்றாக செபிக்கிறாள். அன்னைமரி காட்சி கொடுத்து செபமாலை மணிகளை ஒவ்வொன்றாக நகர்த்துகிறார். ஆனால் உதடுகள் அசையவில்லை. திரித்துவ ஆராதணையில் மட்டும் தலை வணங்குகிறார். இதன் மூலம் பெர்னதத்துக்குச் செபமாலை செபிக்க அன்னை கற்று கொடுத்திருக்கிறார்.

1917 மே 13ம் நாள் முதல் அக்டோபர் 13ம் நாள் முடிய பாத்திமாவில் அன்னையின் 6காட்சிகள் நடந்துள்ளன. சிறுவர்கள் லூசியா, பிரான்சிஸ், ஜெசிந்தா மூவரும் கோவாதா ஈரியாவில் இக்காட்சியை கண்டுள்ளனர். அன்னை பிரதிமாதம் 13 ம் நாள் குறிபிட்ட இடத்திற்கு வருமாறு பணித்திருந்தார். சிறுவர்கள் அவ்விடத்திற்குச் சென்று செபமாலை செபிக்கவே அன்னை காட்சியளித்தார்.

இன்றும் முழு விசுவாசத்தோடு செபமாலை செய்யும் குடும்பம் சிறந்த குடும்பமாக விளங்குவதை பார்க்கலாம்...

செபமாலையில் சொல்லப்படும் செபங்கள் பைபிளில் உள்ள இறைவார்த்தைகளே.

முதலில் திருச்சபையின் விசுவாசத்தை அறிக்கையிடுகிறோம்.

அடுத்ததாக இயேசு நமக்கு கற்று கொடுத்த "பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே..." என்ற செபத்தை செபிக்கிறோம்.

அடுத்து "அருள் நிறைந்த மரியே வாழ்க கர்த்தர் உம்முடனே (லூக்1-27)

பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பெற்றவர் நீரே (லூக்1-42)

உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப் பட்டவரே  (லூக்1-32)

அர்ச்சிஷ்ட மரியாயே சர்வேசுரணுடைய மாதவே (லூக்1-43)

பாவிகளாயிருக்கிற எங்களுக்காக (நம்மை தாழ்த்தி)
இப்பொழுது எப்பொழுதும் எங்கள் மரணநேரத்திலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்"


இந்த செபத்தில் வரும் அனைத்து வார்த்தைகளும் வானதூதர் மற்றும் எலிசபெத்தால் வாழ்த்தப்பட்ட கடவுளின் வார்த்தைகளே.

நாம் செபமாலை செபிக்கும்போது தூதர் மற்றும் எலிசபெத்தோடு இணைந்து அன்னையை புகழ்கிறோம். பைபிளை தியானிக்கிறோம்.

செபமாலையின் முக்கியத்துவத்தை அறிந்து விசுவாசத்தோடு செபிக்க வேண்டும். ஆமென்....
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!