![]() |
![]() |
![]() |
புகழ் மாலை சுவாமி, கிருபையாயிரும் கிறிஸ்துவே, கிருபையாயிரும் சுவாமி, கிருபையாயிரும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும். கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும். பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி அர்ச்சியஸ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி அர்சிஷ்ட மரியாயே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் கன்னியர்களில் உத்தம புனித கன்னிகையே ! புனித ஜெபமாலை அன்னையே! கபிரியேல் தூாதரால் அருள் நிறைந்த மரியே என்று வாழ்த்தி வணங்கப்பட்ட ஜெபமாலை அன்னையே! இறைவனுடைய அன்னை என்று எலிசபெத்தம்மாளால் புகழ்ந்து அழைக்கப்பட்ட ஜெபமாலை அன்னையே! ஜெபமாலைத் தியானத்தினால் உம்மைப் போற்றுவது நலமென்று மறைநூல் அறிஞரான புனித பெனவெந்தூரால் அறிவிக்கப்பட்ட செபமாலை அன்னையே! இந்த உத்தம ஜெபத்தால் எல்லாரும் எல்லா நன்மைகளையும் உமது வழியாய் அடையாளம் என்று அவரால் அறிவிக்கப்பட்ட ஜெபமாலை அன்னையே! விண்ணுலகில் உள்ள தூதருக்கு இத்துதி மிகவும் உவப்பானதாய் இருக்கத் தகுதியுள்ள ஜெபமாலை அன்னையே! இறைச்சந்நிதிக்கு மிகவும் உகந்ததும் சிறப்பான பேறுள்ளதுமான தியானத்தைக் கொண்ட ஜெபமாலை அன்னையே! தாவீது மன்னர் பத்து நரம்புள்ள வீணையால் இறைவனை வாழ்த்தியது போல, ஜெபமாலை என்னும் தூய கருவியால் துதிக்கப்படுகின்ற ஜெபமாலை அன்னையே! இஸ்ரயேல் மைந்தர் 150 இராகமுள்ளதாய் அமைத்த ஓர் இசைக்கருவி, செபமாலைக்கு அடையாளம் என மறை வல்லுனரால் அறிவிக்கப்பட்ட ஜெபமாலை அன்னையே! இந்த 150 இராகங்களும் ஜெபமாலையின் 150 மணிகளுக்கு ஒப்பானவை என்பதால் மகிமை பெற்ற செபமாலை அன்னையே! பக்தியுள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் கேடயமாக கைக்கொள்ளும்படி அருளப்பட்ட ஜெபமாலை அன்னையே! இதன் பக்தியைக் கொண்டிருப்பவர்களுக்கு ஞான ஒளியாய் விளங்குகிற செபமாலை அன்னையே! செபமாலைப் பக்தியாய் இருந்த உமது தாசரைக் காப்பாற்ற, பகைவரைத் தோற்கடித்த செபமாலை அன்னையே! ஜெபமாலை பக்தியை அறிக்கையிடும்படி புனித தோமினிக்கு என்ற சாமிநாதருக்குக் கட்டளையிட்ட ஜெபமாலை அன்னையே! ஜெபமாலையை எப்போதும் பக்தியுடன் செபித்தவர்களுக்கு எண்ணிலடங்கா புதுமைகளைச் செய்தருளிய செபமாலை அன்னையே! பக்தியோடு செபமாலையைத் தியானிப்போருக்கு நிரம்ப அருள் பாலிக்கும் செபமாலை அன்னையே! செபமாலைத் தியானத்தை முழுப்பக்தியோடு செய்தல், விண்ணுலக பாதைக்கு ஓர் ஏணி என்று காண்பித்தருளிய செபமாலை அன்னையே! இறைத் திருவுரைப்படி இடைவிடாது செபிப்பதற்கு இது ஓர் உன்னத வழியாய் விளங்கச் செய்த செபமாலை அன்னையே! துறவியர் எப்போதும் இச்செபத்தினால் உம்மைத் துதிப்பதினால், உமது ஆதரவை அடையச் செய்கிற செபமாலை அன்னையே! குடும்பங்களில் அன்றாடம் செபமாலை செய்து உம்மை மன்றாடுவோர் தங்கள் நிலமைக்கு ஏற்ற பலன்களைப் பெறச் செய்தருளும் செபமாலை அன்னையே! மெய்யான செபத்தியானங்களுடைய ஒளியாகிய செபமாலை அன்னையே! விசுவாசிகளுக்குப் பாங்கான நல்வழியாகிய ஜெபமாலை அன்னையே எல்லா நன்மைகளுக்கும் ஊற்றாகிய செபமாலை அன்னையே! மறை பொருட்களையெல்லாம் நிறைவாய்க் கொண்டிருக்கிற செபமாலை அன்னையே! புனிதர் அனைவருடைய மணிமுடியாகிய செபமாலை அன்னையே! உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, - எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, - எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி. செபிப்போமாக.. ஆண்டவரே வானதூதர் அறிவித்ததால் உம் திருமகன் இயேசுக்கிறிஸ்து மனிதரானதை அறிந்திருக்கிற நாங்கள் அவருடைய பாடுகளினாலும் சிலுவையினாலும் உயிர்த் தெழுதலின் மகிமையை அடைவோமாக. செபமாலை அன்னை எங்களுக்காகப் பரிந்து பேசுவதால் இந்த வரத்தை எங்கள் உள்ளத்தில் பொழிந்தருள வேண்டுமென, எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் ஆமென் |