ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

       பொதுக்காலம் 23ஆம் வாரம் - ஞாயிறு

    திருப்பலி முன்னுரை

வருடாந்த
ஞாயிறு வாசகம்
    pdf/Calendrier-litrugique2021.pdf
ஞாயிறு
முன்னுரை
MP3
Sr. Gnanaselvi (india)
பிறருக்கு நன்மை செய்ய வந்திருக்கின்ற நல்ல நெஞ்சங்களே!
B தவக்காலம்1
நன்மையை மட்டுமே செய்யத் தெரிந்த நம் இறைவன், நாமும் நன்மையை மட்டுமே செய்ய வேண்டும் என இந்த ஞாயிறு வழியாக கற்பிக்கின்றார்.

பிறந்ததன் அர்த்தம் பூர்த்தியாக அடுத்தவருக்கு நன்மை செய்யவேண்டும். நன்மை செய்வது நமக்குக் கிடைத்த நல்வாய்ப்பாகும். நன்மை செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் அதை நழுவவிடக் கூடாது. சென்ற இடமெல்லாம் நன்மை செய்த யேசுவின் வழித்தோன்றல்கள் நாம். இயேசு செய்த அதே செயலைச் செய்யக் கடமைப்பட்டவர்கள் நாம்.

அன்று,
இயேசு பேச்சற்றவர்களைப் பேசச் செய்தார். செவிடர்களை கேட்கச் செய்தார். இவர் எத்துனை நன்றாக யாவற்றையும் செய்து வருகின்றார்" என்று மக்கள் பலரும் யேசுவைப் பற்றி பேசிக் கெண்டார்கள்.

இன்று,
நம்மைப் பற்றி பிறர் என்ன பேசுகிறார்கள்? நம்மைப் பற்றி பிறர் என்ன பேச வேண்டும்? நம்மைப் பற்றி பிறர் நல்லது பேச நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

இக் கேள்விகளுக்குரிய பதிலை சிந்திக்கச் சொல்கிறது, இன்றைய திருப்பலி. திறமையைவிட தொடர்ந்து செய்யும் நற்செயல் பாராட்டுக்கு உரியது. இந்த உலகம் இருப்பதும், இயங்குவதும் நற்செயல் செய்கின்ற மனிதர்களால் தான். உலகம் நல்ல நிலையில் இயங்க நாமும் ஒரு கருவியானால் நல்லது தானே!

நற்செயல் ஒன்றுதான் ஒருபோதும் அழியாதது. நம்மை அவதூறாகப் பேசினாலும் நாம் செய்த நற்செயல் எவருக்கும் ஒருபோதும் தீங்கு இழைக்காது.

பேச்சற்றவர்களைப் பேசச் செய்யும், காது கேட்கும் திறன் இழந்தோரை கேட்கச் செய்யும் வல்லமை நம்மிடம் இல்லை. ஆனால் பேச்சிழந்து நிற்பவர்களுக்கும், காது கேட்கும் திறன் இழந்தோருக்கும் ஆறுதலாக இருக்கும் போது, அவர்களை பேசச் செய்யும், காது கேட்கச் செய்யும் செயலை செய்தவர்கள் நாமாவோம்.

துன்புறும் ஏழையருக்காக, ஏழைசொல் அம்பலத்தில் ஏறாது என வாடுவோருக்காக வழக்காடும் போதும், அவர்களுக்கு நாம் நியாயம் கிடைக்கச் செய்யும் போதும், பிறரின் வாழ்க்கைக்கு உகந்த செயல்களைச் செய்யும் போது யேசுவைப் போல செயல்படுகிறோம்.
பிறரின் வாழ்க்கைக்கு வளமூட்டும் நற்செயலைச் செய்ய தூண்டுகோலாய் தூண்டிவிட்டு, அதற்கான அருளை வாரிவழங்கும் திருப்பலியில் அன்றாட வாழ்க்கையை செழிக்கச் செய்யும் நற்செயல்களை செய்து இன்புற, இறைவா இறங்கி அருள் புரிக! என மனம் நிறைய மன்றாடுவோம்.
 
B தவக்காலம்2
B தவக்காலம்3
B தவக்காலம்4
திருநீற்றுப்புதன்
 
Sermon Fr.Albert
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. நல்லது செய்ய ஆற்றலையும் அருளையும் பொழிகின்ற தேவா!
திருப்பீடத்தை ஆட்சிசெய்யும் திருப்பணியாளர்கள் செய்கின்ற நலமிகு பணியால், மென்மையும், மேன்மையும் நிறைந்த உலகு அமைய அருள் கேட்டு இறைவா உம்மை வேண்டுகிறோம்.

2. வளமிகு செயல்களின் வற்றாத ஊற்றே எம் இறைவா!
வாரிவழங்கும் நற்செயலை செய்யாவிட்டாலும், ஏழை,எளிய மக்களின் நலன் காக்கும் செயலைச் செய்யும், மனநிலையை நிரந்தரமாக்கி செயல்பட நாட்டுத் தலைவர்களுக்கு அருள் கேட்டு இறைவா உம்மை வேண்டுகிறோம்.

3. சென்ற இடமெல்லாம் நன்மை செய்த எம் அன்பு தெய்வமே!
நன்மை செய்த உம் தடம் பார்த்து, நாங்களும் தடம் பதிக்க உழைக்கும் எமது ஆன்மீகத் தந்தைக்கு நலம் பல பொழிய அருள் கேட்டு இறைவா உம்மை வேண்டுகிறோம்.

4. நலன்களின் ஊற்றான அன்பின் ஆண்டவரே!
நலன் பல விளைய வேண்டும், நாங்கள் எதிர்பார்த்த நன்மைகள் கைகூட வேண்டும் என மன்றாடிக் கொண்டிருக்கின்ற, மக்கள் அனைவரின் விண்ணப்பங்கள் நிறைவேற அருள் கேட்டு இறைவா உம்மை வேண்டுகிறோம்.

5. நாங்கள் செய்வதற்கு ஏற்ற பலனைத் தருகின்ற இறைவா!
நன்மை செய்யத் தடையாக இருக்கின்ற பேராசை, சோம்பல், புரிந்து கொள்ளாமை இவைகளை அகற்றி, பிறரின் வாழ்க்கையை வளப்படுத்தும் நற் செயலைச் செய்ய இங்கே கூடி நிற்கின்ற அனைவருக்கும் அருள் கேட்டு இறைவா உம்மை வேண்டுகிறோம்.


 
மறையுரை சிந்தனைகள்

போர் முனை ஒன்றில் நான்கு பேர்வீரர்கள் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள், அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று. அவர்களில் மூவர் வெள்ளைக்காரர்கள், ஒருவர் கருப்பு இனத்தவர். திடீரென்று பகைவர் வீசிய கையெறி குண்டு ஒன்று பறந்து வந்து அவர்களின் முன்னே விழுந்தது. இரண்டு மூன்று வினாடிகளில் அது வெடிக்கப் போகிறது. தாங்கள் இறக்கப் போகிறோம்" என்று அவர்கள் உணர்ந்து முடிப்பதற்குள் பாய்ந்து விழுந்து, அந்த வெடிகுண்டை வாரி அணைத்துக் கொண்டு கவிழ்ந்து படுத்துக் கொண்டான் அந்தக் கருப்பினப் போர்வீரன். மறுகணம் அந்தக் குண்டு வெடித்தது. அவன் சின்னா பின்னமாகி சதைத் துண்டுகளாகச் சிதறி விழுந்து உயிரை விட்டான். அவன் மட்டும் சமயோசிதமாக அப்படிச் செய்யாவிட்டாலும் கூட அந்த குண்டு வெடித்திருக்கும். அந்த நான்கு பேரும் மாண்டு போயிருப்பார்கள். தான் ஒருவன் மட்டும் இறந்தாலும் பரவாயில்லை மற்ற மூவர் வாழவேண்டும் என்று முடிவெடுத்துத் தன்னையே பலியிட்டான், அந்த வீரன். இவ்வளவும் நடந்தது அந்த ஓரிரு வினாடிகளுக்குள். இத்தகைய நல்ல முடிiவை எடுக்கின்ற அளவுக்கு அவன் பக்குவப்படுத்தப் பட்டிருந்தான். தன்னைப் பலியிடுவதையே இயல்பாகக் கொண்டிருந்தான்.

அப்படித்தான் அதன் பிறகு அவனைப் பற்றிப் பேசியவர்கள் கூறினார்கள். நல்ல நண்பன் அவன் பிறருக்கு உதவி செய்வதில் அவ்வளவு மகிழ்ச்சி அடைவான்"
"கேட்கிற போது மட்டுமல்ல,கேளாத போதும் உதவிசெய்ய முன் வருவான்"
எந்தக் கைமாறும் எந்தப் பிரதி பலனும் எதிர்பார்க்க மாட்டான்.
அடுத்தவனுக்கு ஒரு துன்பம் என்றால் அவன் பொறுத்துக் கொள்ள மாட்டான்" தனக்கு துன்பம் வந்ந மாதிரி துடித்துப் போவான்." என்றெல்லாம் பேசினார்கள் அந்த தியாக வீரனைப் பற்றி!
இப்படியெல்லாம் நம்மைப் பற்றி யாராவது பேசுவார்களா? அப்படிப் பேசினால், அப்படிப் பேசப்பட்டால் நாம் பேறு பெற்றவர்கள்.
அந்த ஆளுகிட்ட போறதைவிட,
அந்த அம்மாகிட்ட எதிர்பார்க்கிறதைவிட,
அந்த அய்யா கிட்ட கேட்கிறதைவிட,
ரோட்ல போற பிச்சைக்காரன்கிட்ட கேட்கலாம்" என்று யாராவது நம்மைப் பார்த்து தனக்குள் முணுமுணுத்தால் கூட நாம் நற்செயல் செய்வதில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறோம் என்று தானே பொருள்.
நற்செயல் செய்வது நமது இயல்பாக இருக்க வேண்டும்.
 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.


 
மறையுரைச்சிந்தனை  - அருட்சகோதரி: செல்வராணி O.S.M.


 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
 
 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை
 
 
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
 
உள்ளம் திறக்கப்படட்டும்

உயிர் இல்லா உடல் பிணம், உயிர் இருந்தும் ஐம்புலன்கள் செயல்படாவிட்டால் அவர்கள் ஜடம், ஐம்புலன்களை அதன் நோக்கில் விடுபவர் மிருகம், ஐம்புலன்களைக் கட்டி, நேர்படுத்தி, செவ்வனே பயன்படுத்துபவர் மனிதர். கண்ணிருந்தும் பார்க்க இயலவில்லையே, காதிருந்தும் கேட்க இயலவில்லையே என ஏங்கும் மனிதர்கள் ஏராளம். கண்ணிருந்தும் பார்க்காமல், காதிருந்தும் கேட்காமல் இருப்போர் எண்ணிக்கை அதைவிட அதிகம். ஐம்புலன்களைக் கொடையாகத் தந்து அதன் வழியாக இறைத் தன்மையை அடைய அழைப்பு விடுப்பது இன்றைய வாசகங்கள்.

பார்வையற்ற தன்மையையும், கேட்க இயலாத நிலையையும், பேச முடியாத தன்மையையும் இரு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று பிறப்பினாலோ, விபத்தினாலே இக்குறைபாடு ஏற்படுதல், மற்றொன்று பேச , பார்க்க, கேட்க முடிந்தும் தனக்குத் தேவையானதையும், பிடித்ததையும் மட்டும் பேசுதலும், பார்த்தாலும், கேட்டலும் ஆகும்.

முதல் வகைக் குறைபாடு உடையோர் அதிலிருந்து விடுபட அதிக ஆர்வமுடையவர்களாயும், அதற்காக இறைவனிடம் மன்றாடுபவர்களாயும் இருப்பர். இப்படிப்பட்டவர்களின் வாழ்வில் இறைவனின் வல்லமை எளிதில் செயல்படும். இரண்டாம் வகையானவரோ அதிலிருந்து எந்த வகையிலாவது மாறி விடுவோமோ என்று அஞ்சி தங்களுக்குள்ளேயே பூட்டி வைத்திருப்பர். இவர்கள்தான் உள்ளத்தில் உறுதியற்றவர்கள்.

உள்ளத்தில் உறுதியற்ற இவர்கள் திருத்தூதர் கூறுவதுபோல இனம், மொழி, வசதி, அறிவு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு பிரித்துப் பார்ப்பர். இத்தகைய தரம் பிரிப்பது என்பது அச்சத்தால், தன்னம்பிக்கை இன்மையால், தன்னிலை அறியாததால் நிகழ்வதாகும். இவ்வகையான உள்ளத்தினரை நோக்கி ஆண்டவர் தரும் கட்டளை "திறக்கப்படு" என்பதாகும். அதாவது உள்ளம் திறக்கப்படட்டும் என்று கட்டளையிடுகிறார்.

ஆண்டவர் இயேசு இனம், மொழி, வசதி, அறிவு, பால் என்று எந்தவித வேறுபாடுகளும் பார்க்காமல் அனைவரையும் சமமாகப் பார்த்து, குணமளித்து, வாழ்வித்து, வழிகாட்டித் தன் இறைத்தன்மையை உலகறியக் காட்டுகிறார்.

வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும், மனித மனப் பிளவுகளும் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று. இயற்கையால் நாம் அனைவரும் மனித நேயத்தோடு படைக்கப்பட்டவர்கள். அந்நிலையை நாம் மீண்டும் அடைய இயற்கையான, செயற்கையான குறைபாடுகள் நீங்க நமக்குத் தேவையான அடிப்படை குணம் அன்பு ஆகும். அன்பு என்கின்ற உயரிய பண்பில் நாம் வளரும்போது பாலை நிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும், வறண்ட பாலை நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும், கனல் கக்கும் மணற்பரப்பு நீர் தடாகம் ஆகும், தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும். ஐம்புலன்களை ஒருங்கிணைப்போம். கொடையாகப் பெறப்பட்ட சக்திகளை இறை மகிமைக்காகப் பயன்படுத்துவோம். பாரினில் நாம் அனைவரும் இறைச்சாயல்கள் என்பதில் உறுதி பெற்று இறைவனின் பிள்ளைகளாகப் பாகுபாடும், குறைகளுமற்ற வாழ்வு வாழ்வோம்.


=அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
 
ஊனம் மறையட்டும்

இன்றைய நற்செய்தியிலே காது கேளாதவரும், திக்கிப் பேசுபவருமான ஒருவரைக் குணமாக்கும் இயேசுவை நாம் சந்திக்கின்றோம். புதுமை நடந்ததும் அவரைச் சுற்றியிருந்தவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகின்றார்! காது கேளாதோர் கேட்கவும், பேச்சற்றோர் பேசவும் செய்கின்றாரே! என்று பேசிக்கொண்டனர் (மாற் 7:37).

அன்று புதுமைகள் செய்த இயேசு, இன்றும் நம் நடுவே வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றார்; புதுமைகள் செய்து கொண்டுதானிருக்கின்றார்.

இதற்கு ஓர் உதாரணம். தஞ்சை மறைமாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டிக்குப் பக்கத்திலுள்ள ஒரு கிராமம். அக்கிராமத்திலே தாயொருத்திக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது! ஆண்டுகள் பத்து உருண்டோடியும் சிறுவன் பேசவில்லை! எத்தனையோ மருத்துவ முறைகள்; பேச்சுப் பயிற்சிகள் எத்தனையோ! தஞ்சை, சென்னை போன்ற இடங்களிலுள்ள மருத்துவக் கல்லூரிகள்! எத்தனையோ கோயில்கள்! பாவம் அந்தச் சிறுவன் ! ஓரிரு வார்த்தைகள் கூட அவனால் பேச முடியவில்லை !

கடைசியாக அந்தச் சிறுவனின் பெற்றோருடைய கண்கள் வேளாங்கண்ணியை நோக்கித் திரும்பின. வேளாங்கண்ணிக்குச் சென்றனர். அவர்கள், மாதாவே ! மாதர்குல மாணிக்கமே ! எங்கள் குழந்தை பேச வேண்டும். உலகின் ஒளியைக் கையிலேந்தி பாருக்கெல்லாம் அருள்புரியும் அன்பு அன்னையே, அருள்புரியும் தாயே! என மெழுகென உருகி மன்றாடினர். அன்று இரவு அனைவரும் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த நேரம்! சிறுவன் திடீரென எழுந்து, அம்மா! அம்மா! என்று அலறிக்கொண்டு அறைக் கதவைத் திறந்து கொண்டு அன்னையின் பேராலயத்தை நோக்கி ஓடினான். பெற்றோர் வேளாங்கண்ணியில் ஒரு வாரம் தங்கி ஏழைகளுக்கு உணவளித்துச் சென்றனர்.

நம் ஆண்டவராம் இயேசு இன்றும் புதுமைகள் செய்துகொண்டிருக்கின்றார் என்ற உண்மை நம்மை திடப்படுத்தவேண்டும் (முதல் வாசகம்). உங்களில் ஊனம் மறைய வேண்டுமா? பாலை நிலம் சோலை நிலமாக வேண்டுமா ? மனிதம் புனிதமாக வேண்டுமா? நீங்கள் நம்பிக்கையில் செல்வராகுங்கள் (இரண்டாம் வாசகம்); அப்போது நீங்கள் தேடுவது உங்கள் வீடு தேடிவரும் என்கின்றார் இயேசு.

மேலும் அறிவோம் :

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள் : 7).

பொருள் : தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன் திருவடி சேர்வோர் உள்ளத்தில் துன்ப துயரங்கள் நீங்கிவிடும். ஏனையோர் மனக்கவலை மாறாது.
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்
குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
 

 "திறக்கப்படு"

ஒரு சிறுவன், "எனது தாத்தாவுக்கு நான்கு கைகளும் மூன்று காதுகளும் உள்ளன என்றான். அவன் குறிப்பிட்ட நான்கு கைகள்: வலக்கை, இடக்கை, வழுக்கை, பொக்கை. அவன் குறிப்பிட்ட மூன்று காதுகள் : வலக்காது, இடக்காது. கேட்காது.

வயதானவர்களுக்குத் தலை வழுக்கையாகவும் வாய் பொக்கையாகவும் காது மந்தமாகவும் மாறுவது இயல்பு. ஆனால் ஒரு சிலருக்குக் காது இருந்தும் அவர்கள் கேளாதவர்களாக இருப்பதுதான் வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது. கல்வி கேள்வியால், ஆன்றோர்களுடைய அருள்வாக்கால் துளைக்கப்படாத செவிகள் செவிட்டுத் தன்மையுடையன.

"கேட்பினும் கேளாத் தகையவே
கேள்வியால் தோக்கப்படாதசெவி" (குறள் 418)

கிறிஸ்து இம்மையில் வாழ்ந்தபோது விண்ணரசைப்பற்றிய நற்செய்தியைப் பல்வேறு உவமைகள் வாயிலாகப் போதித்தார். ஆனால் அவருடைய போதனையை மக்கள் உணரவில்லை; உணர்ந்து மனம் மாறவில்லை. அவருடைய போதனை செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று. எனவேதான் அவர் இறைவாக்கினர் எசாயாவை மேற்கோள்காட்டி அம்மக்களைப் பற்றிப் பின்வருமாறு கூறினார்: "இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது. காதும் மந்தமாகிவிட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டனர்." (மத் 13:15)

பாவங்களிலெல்லாம் கொடிய பாவம் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டாலும் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்வதாகும், எனவேதான், நீங்கள் இன்று கடவுளுடைய குரலைக் கேட்டால் உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள் என்று எச்சரிக்கிறது. திருப்பாடல் 95:8.

கடவுளுடைய வார்த்தையைக் காதால் கேட்கவும் அவருடைய புகழை நாவால் அறிக்கையிடவும் இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது.

இன்றைய முதல் வாசகம் மெசியாவின் காலத்தில் பார்வையற்றோர் பார்ப்பர்; காது கேளாதவர் கேட்பர் என அறிவிக்கின்றது (எசா 35:4-7). இறைவாக்கினர் எசாயாவை மேற்கோள்காட்டி, தாமே வரவிருக்கும் மெசியா என்பதற்குச் சான்று அளித்தார் கிறிஸ்து; அதாவது, பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்: காது கேளாதோர் கேட்கின்றனர் (லூக் 7:22).

இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து, காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரைக் குணப்படுத்துகிறார், அவருக்குக் குணமளிக்கும் முன், அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைக்கிறார்; தம் விரல்களை அவர் காதுகளில் இடுகிறார்; உமிழ் நீரால் அவர் நாவைத் தொடுகிறார்; வானத்தை அண்ணாந்து பார்க்கிறார்; பெருமூச்சுவிடுகிறார். அதன் பிறகு, "எப்பத்தா" அதாவது "திறக்கப்படு" என்று கூறி அவரைக் கேட்கும்படியும் பேசும்படியும் செய்கிறார்,

கிறிஸ்துவின் இப்பல்வேறு செயல்கள் அருளடையாளத் தன்மை கொண்டவை, அருள் அடையாளங்கள் நம்பிக்கையின் அருள் அடையாளங்கள், அருள் அடையாளங்கள் பயனளிக்க வேண்டுமென்றால் அதற்கு நம்பிக்கை முன்னதாகவே தேவைப் படுகிறது. எனவேதான் இயேசு கிறிஸ்து பல்வேறு செயல்களின் மூலம் படிப்படியாக அம்மனிதரிடத்தில் நம்பிக்கையை வளர்த்து அதன்பிறகே அவரைக் குணப்படுத்துகிறார்,

கிறிஸ்துவின் அதே வழிமுறையைத்தான் திருச்சபையும் பின்பற்றுகிறது. ஒவ்வொரு அருளடையாளத்திலும் முதலில் அருள்வாக்கு மூலமாக நமது நம்பிக்கையை வளர்த்து அதன்பிறகே அருளடையாளச் சடங்குகளை நிறைவேற்றுகிறது. திருப்பலியிலும் அருள்வாக்கு வழிபாடு முடிந்தபின்னே நற்கருணை வழிபாடு தொடங்குகிறது.

திருமுழுக்குப் பெறுவோரின் காதையும் வாயையும் குரு தொட்டுப் பின்வருமாறு கூறுகிறார் ! *செவிடர் கேட்கவும் ஊமையர் பேசவும் ஆண்டவர் செய்தருளினார். நீர் விரைவில் அவரது வார்த்தையைக் காதால் கேட்கவும், அவ்விசுவாசத்தை நாவால் அறிக்கையிடவும் செய்தருள்வாராக."

நாம் கடவுளுடைய வார்த்தையைக் காதால் கேட்கவேண்டும், ஏனெனில் கேட்பதால்தான் நம்பிக்கை உண்டாகும், "அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும்" (உரோ, 10:17), கேள்வியால் நாம் பெற்ற நம்பிக்கையை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். "நாங்கள் கடதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது" (திப 4:20) என்று துணிவுடன் கூறிய பேதுருவின் ஆர்வம் நம்மை ஆட்கொள்ள வேண்டும்.

கடவுளின் குரலைக் கேட்பவர்கள் மற்றவர்களின், குறிப்பாக, நலிவடைந்தவர்களின் குரலைக் கேட்பார்கள், மலையில் ஒருவர் பிறந்தநாள் "கேக்" வெட்டுகிறார். அவரைச் சுற்றி இருப்பவர்கள் அவரிடம் என்ன திரைப்படப்பாடல் பாடுவார்கள் ? "மலையோரம் வீசும் காற்று, மனசோட பாடும்பாட்டு கேக்குதா, கேக்குதா!" "கேக்குதா" என்ற சொல் காதால் "கேக்கு தா" என்ற பொருளையும் நீங்கள் வெட்டுகிற கேக்கைத் தாருங்கள் "கேக்குத் தா" என்ற பொருளையும் கொண்டுள்ளது ஏழைகளின் அபயக்குரல் நமக்குக் கேட்குதா?

"மாண்டவர்களுக்காக அழாதே
கூனிக் குறுகி ஏழ்மையில் இருக்கிறானே
அந்த மனிதனுக்காக இரங்கு
வாய்பேச இயலாத அந்தக் கொத்தடிமைகள்
உலகின் வேதனையைக் காண்கிறார்கள்;
தவறுகள் அவர்கள் கண்ணுக்குப் படுகிறது
ஆனால் அவர்கள் வாய் திறக்க முடியவில்லை
அந்தத் துணிச்சலும் அவர்களுக்கில்லை"
(திருமதி இந்திராகாந்தியைக் கவர்ந்த கவிதை)

துன்புறுவோரின் அபயக்குரலைக் கேட்டு ஆவன செய்யவில்லை என்றால், நாம் காது இருந்தும் கேளாத செவிடர்கள்!

நமது காதுகள் கூர்மையாக இருக்க வேண்டும். அவ்வாறே தமது பார்வையும் நேரிய பார்வையாக இருக்க வேண்டும். பணக்காரர்களை ஒருவிதமாகவும் ஏழைகளை வேறொருவிதமாகவும் பார்த்து. ஒருதலைச் சார்பாக நாம் நடக்காமல் இருக்கும்படி இன்றைய இரண்டாம் வாசகத்தில் நம்மை எச்சரிக்கிறார் புனித யாக்கோபு.

இன்றைய நற்செய்தியில், இயேசுவின் புதுமையைக் கண்ட மக்கள் "இவர் எத்துணை நன்றாய் யாவற்றையும் செய்து வருகிறார்" (மாற் 7:37) என்று வியப்படைந்தனர். கடவுள் உலகத்தைப் படைத்தபோது தாம் படைத்ததை உற்று நோக்கினார், அவர் படைத்தவை மிகவும் நன்றாக இருந்தன (தொநூ 1:31). இந்த முதல் படைப்பு பாவத்தால் சீரழிந்த நிலையில் கடவுள் தம் மகன் கிறிஸ்து வழியாக மீண்டும் உலகைப் படைக்கிறார். இப்புதுப்படைப்பு முதல் படைப்பை விடச் சிறந்ததாக உள்ளது என்ற ஆழமான இறையியல் உண்மையையும் இப்புதுமை உணர்த்துகிறது.

திருமுழுக்கினால் புதுப்படைப்பாக மாறியுள்ள நாம். கடவுளுடைய வார்த்தையைக் காதால் கேட்போம். அதன் எதிரொலியாக ஏழைகளின், ஒடுக்கப்பட்டவர்களின் குரலையும் கேட்டு அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்.



தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
 
 செவிடாய், ஊமையாய்...

நாற்பது ஆண்டு மண வாழ்வு கண்ட அந்தக்‌ கணவன்‌ மனைவியிடையே ஒரு நாள்‌ கூட சண்டையில்லை. சச்சரவு இல்லை, ஒருவர்‌ ஒருவரோடு ஒர்‌ உரசல்‌ இல்லை, உறவு முறிவு இல்லை. உரக்கக்‌ கத்திய நினைவு இல்லை. இப்படியும்‌ மணவாழ்க்கை சாத்தியமா? என்று உங்கள்‌ புருவத்தை உயர்த்துகிறீர்களா? அப்படி அவர்கள்‌ வாழ்ந்தது உண்மைதான்‌. அதற்குக்‌ காரணம்‌ அவர்களில்‌ ஒருவர்‌ ஊமை. இன்னொருவர்‌ செவிடு. இது கதை என்ற அளவில்‌ வியக்க வைக்கும்‌!

"உன்னைத்‌ தாழ்த்திப்‌ பேசும்போது ஊமையாயிரு. உயர்த்திப்பேசும்போது செவிடனாய்‌ இரு. வாழ்வில்‌ எளிதில்‌ வெற்றி பெறுவாய்‌". பொன்மொழி மெய்சிலிர்க்கச்‌ செய்யும்‌.

அதற்காக உடலளவில்‌ இந்த ஊனங்களை விரும்பி ஏற்றுக்‌ கொள்ள முடியுமா? கொஞ்சம்‌ கற்பனை செய்து பாருங்கள்‌. என்‌ மறையுரையைக்‌ கேட்கும்‌ உங்களில்‌ ஒருவர்‌ கேள்விப்‌ புலனற்று இருக்கிறார்‌. என்‌ உதடுகளின்‌ அசைவுகளை மட்டுமே பார்க்க முடிகிறது. உரைக்கின்ற ஒரு சொல்‌ கூட அவருக்கு காதில்‌ நுழையவில்லை. சுற்றிலும்‌ இருப்பவர்கள்‌ என்‌ மறையுரையைக்‌ கேட்டு ரசிப்பதை, வியப்பதை, சில சமயங்களில்‌ சிரிப்பதை, மகிழ்வதைப்‌ பார்க்கிறார்‌. இந்த உணர்வுகளில்‌ எதையும்‌ அவரால் வெளிப்படுத்த இயலவில்லை. தன்‌ மீதே ஒரு வித வெறுப்பு, எரிச்சல்‌, தனிமைப்‌ படுத்தப்படும்‌ விரக்தி...

ஒரு வகையில்‌ சொல்லப்போனால்‌ செவிடாக இருப்பது குருடாக இருப்பதைவிடக்‌ கொடுமையானது. கண்‌ பார்வை இழந்தவர்‌ மீது பிறருக்கு இரக்கம்‌ வரும்‌ அனுதாபம்‌ வரும்‌. காதுகேளாதவர்களோ பிறரின்‌ ஏளனத்துக்கும்‌ எரிச்சலுக்கும்‌ ஏன்‌ நகைப்புக்குமே உரியவர்களாய்‌ இருப்பார்கள்‌.

ஹெலன்‌ கெல்லர்‌ காது கேளாதவர்‌. அதே நேரத்தில்‌ பார்வை இழந்தவர்‌. "குருடாக இருப்பது செவிடாக இருப்பதை விட மோசமானது -.. எனப்‌ பலர்‌ கருதுகின்றனர்‌. என்னிடம்‌ இரண்டு ஊனங்களும்‌ இருக்கின்றன. ஆனால்‌ காது கேளாமல்‌ இருக்கின்றவருக்குத்தான்‌ அன்றாட வாழ்வில்‌ :பல கதவுகள்‌ அடைக்கப்படுகின்றன. வானொலி, தொலைக்காட்சி, உரையாடல்‌ அனைத்தும்‌ எட்டாத கனியாகி விடுகின்றன. இறுதியில்‌ கிட்டுவது புறக்கணிப்பும்‌ தனிமையுமாகும்‌"" என்று அவர்‌ கூறுகிறார்‌.

காது கேளாதவராக இருப்பது மிக மோசமானது. அதோடு. சேர்ந்து வாய்‌ பேச இயலாதவராக -திக்கிப்‌ பேசுபவராக இருந்தாலோ வாழ்வே நரகமாகிவிடும்‌. அதனால்தான்‌ வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு அத்தகையவரை நோக்கி "எப்பத்தா" அதாவது திறக்கப்படு" (மார்க்‌. 7:34) என்றாரா இயேசு?

இயேசுவின்‌ குணப்படுத்தும்‌ இந்த ஊழியம்‌ இறைவாக்கினர்‌ எசாயா 35:4-7, 29:18, 61:1-3 போன்ற பழைய ஏற்பாட்டு பகுதிகளில்‌ முன்னுரைத்த மெசியாவின்‌ பொற்கால நிறைவாகும்‌. "உள்ளத்தில்‌ உறுதியற்றவர்களே, அநீதிக்குப்‌ பழிவாங்கும்‌ கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்‌. அப்போது பார்வையற்றோரின்‌ கண்கள்‌ பார்க்கும்‌. காது கேளாதோரின்‌ செவிகள்‌ கேட்கும்‌ அப்பொழுது கால்‌ ஊனமுற்றோர்‌ மான்‌ போல்‌ துள்ளிக்குதிப்பர்‌".

அடக்குமுறையும்‌ ஒடுக்குதலும்‌ மேலோங்கி நிற்கும்‌ எங்கும்‌ மக்கள்‌ ஊமையாக்கப்படுகிறார்கள்‌. செவிடாக்கப்படுகிறார்கள்‌. குருடாக்கப்படுகிறார்கள்‌. முடமாக்கப்படுகிறார்கள்‌. உடலளவில்‌. ஊமையாகவும்‌, செவிடாகவும்‌ குருடாகவும்‌ முடமாகவும்‌ இருப்பதைவிட இது கடினமானது. மனிதனை மனிதனாக நடத்தாத அவலநிலை! இந்தப்‌ பின்னணியில்தான்‌ மெசியா காலத்தில்‌ வரப்போகும்‌ மீட்புப்‌ பற்றி எடுத்துரைக்கிறார்‌. எசாயா. அந்த அறிவிப்பில்‌ மகிழ்ச்சியும்‌ உற்சாகம்‌ கலந்த நம்பிக்கையும்‌ தொனிக்கிறது. ஏசாயா 35:5, மார்க்‌ 7:37 இவற்றில்‌ உள்ள ஒப்புமை இதை விளக்கும்‌. எனவே எசாயா முன்னுரைத்த மெசியாவின்‌ காலம்‌ இயேசுவின்‌ காலமே என்பது மார்க்‌ உணர்த்த விரும்பும்‌ உண்மை.

காதும்‌ நாவும்‌ ஊனத்துக்கு ஆளாகிய நிலையில்‌ அவர்கள்‌ நமது பரிதாபத்துக்கோ அனுதாபத்துக்கோ உரியவர்கள்‌ அல்ல. நமது நேசக்கரங்களின்‌ அரவணைப்புக்குரியவர்கள்‌. மறைந்த மாமேதை திருத்தந்தை 2ம்‌ அருள்‌ சின்னப்பர்‌ குறிப்பிடுவது போல "அன்பு எனும்‌ மொழியை ஊமையர்களாலும்‌ பேச முடியும்‌. செவிடர்களாலும்‌ கேட்க முடியும்‌. அதனால்‌ அன்பு மட்டுமல்ல, மனித வலுவின்மையில்‌ தன்‌ வல்லமை (2 கொரி. 12:9) விளங்கச்‌ செய்கிறார்‌.

செவிடனும்‌ திக்குவாயனுமாகிய அந்த மனிதன்‌, செவியிருந்தும்‌ கேளாத, வாயிருந்தும்‌ பேசாத இன்றையக்‌ கிறிஸ்தவனின்‌ அடையாளம்‌.

".. திருவருட்சாதனங்களின்‌ மூலமாக இயேசு இடையறாது தொட்டுக்‌ குணப்படுத்திக்‌ கொண்டு வருகிறார்‌." (கத்தோலிக்கத்‌ திருச்சபையின்‌ மறைக்கல்வி எண்‌ 1504). அதனால்தான்‌ திருமுழுக்கின்‌ போது குருவானவர்‌ நம்‌ காதுகளைத்‌ தொட்டு அவற்றை இறைவார்த்தையைக்‌ கேட்கத்‌ திறந்துவிடும்படியாகவும்‌, நம்‌ வாயைத்‌ தொட்டு இறைவார்த்தையால்‌ பெற்ற நம்பிக்கையை அறிக்கையிடத்‌ திறந்துவிடும்படியாகவும்‌ இறைவனை நோக்கி மன்றாடுகிறார்‌.

இறையாட்சியின்‌ பொற்காலம்‌ மலர வேண்டுமா? நமது போலி நிலைப்பாடுகள்‌ ஒழிய வேண்டும்‌ என்ற திருத்தூதர்‌ யாக்கோபின்‌ குரலுக்கு செவி திறப்போம்‌. ஊனமுற்றோர்‌, வறியவர்‌, அடிப்படைத்‌ தேவைகள்‌ நிறைவு காணாமல்‌ அல்லல்‌ படுவோர்‌ மனித மாண்பு மறுக்கப்படுவோர்‌ ஆகியோர்‌ மேம்பாடுகாண இயேசுவின்‌ சாட்சிகளாய்‌ வாய்‌ திறப்போம்‌ (யாக்‌. 2:5).

சமூக வாழ்வில்‌ மட்டுமல்ல, இறை உறவில்‌ - இறை உறவின்‌ வெளிப்பாடான செப வாழ்வில்‌ ஈடுபாடு இழந்தவர்கள்‌ எல்லாரும்‌ ஆன்மீக அளவில்‌ ஊனமுற்றவர்களே! கடவுளிடம்‌ பேசும்‌ திறனற்றவர்கள்‌, கடவுள்‌ பேசுவதைக்‌ கேட்கும்‌ திறனற்றவர்கள்‌. வாழ்க்கையின்‌ எத்தனை தளங்களில்‌ நாம்‌ திறக்கப்பட வேண்டியவர்கள்‌!

செல்வத்துள்‌ செல்வம்‌ செவிச்செல்வம்‌. இது வள்ளுவர்‌ வாக்கு. வானத்தை அண்ணாந்து பார்த்து பெருமூச்சுவிட்டு இயேசு எஃபத்தா (திறக்கப்படு) என்றார்‌ (மார்க்‌ 7:34). செவித்திறன்‌ இல்லாத மனிதனின்‌ நிலை இயேசுவைப்‌ பெருமூச்சுவிட வைக்கிறது.

"கேட்கச்‌ செவியுள்ளோர்‌ கேட்கட்டும்‌"" - இயேசு தன்‌ போதனைகளை முடிக்கிறபோதெல்லாம்‌ சொல்லி வைத்த வார்த்தைகள்‌. செவி எல்லாருக்கும்‌ உண்டு. செவித்திறனும்‌ உண்டு. ஆனால்‌ நல்லவற்றைக்‌ கேட்பதற்கு நம்‌ செவிகள்‌ தயாரா என்பதுதான்‌ இயேசுவின்‌ கேள்வி.

பொய்யும்‌ புரளியும்‌ பழிச்‌ சொற்களும்‌ வன்முறை வார்த்தைகளும்‌ இச்சமூகத்தை அலைக்கழிப்பதைக்‌ காணும்பொழுது எதற்கு இந்த நாவு? எதற்கு இந்தக்‌ காது? என்று கேட்கத்‌ தோன்றுகிறது. ஆயினும்‌ கடவுள்‌ கொடுத்த இம்மாபெரும்‌ கொடைகள்‌ இல்லையென்றால்‌ உண்மையையும்‌ நன்மையையும்‌ எடுத்துரைப்பதும்‌ கேட்பதும்‌ இயலாமல்‌ போய்விடாதா? "திறக்கப்படு " என்று சொல்லி அடைபட்டுக்‌ கிடந்த காதுகளையும்‌ கட்டப்பட்டிருந்த நாவையும்‌ திறந்து வைத்த இறைமகனின்‌ ஆற்றலைப்‌ போற்றுவோம்‌.

திறக்கப்பட வேண்டியவைகள்‌ நிறைய உள்ளன. இன்று சமூகக்‌ கொடுமைகளால்‌ பேசும்‌ திறனையும்‌ கேட்கும்‌ திறனையும்‌ இழந்து நிற்கும்‌ மக்கள்‌ ஏராளம்‌. இவர்கள்‌ விடுதலை பெறும்‌ வரை சமூக விடுதலை சாத்தியமல்ல. நற்செய்தியில்‌ வரும்‌ இயேசுவின்‌ அற்புதச்‌ செயல்பாடு ஒரு சமுதாயத்தின்‌ காதும்‌ நாவும்‌ திறக்கப்பட வேண்டி வெளிப்பட்டதாகும்‌.

அதே நேரத்தில்‌ அழிவைத்‌ தரும்‌ வார்த்தைகளை விதைக்கும்‌ நாவும்‌, பயனற்ற சொற்களைக்‌ கேட்க முனையும்‌ காதுகளும்‌ "மூடப்படுக"" என்று சொல்ல வேண்டியது அவசியம்‌. இல்லையென்றால்‌ இறைவன்‌ கொடுத்த இந்த அரிய கொடைகளின்‌ நோக்கம்‌ நிறைவேறாது. இவை தீமையின்‌ கருவிகளாக மாறிவிடக்கூடும்‌.

இறைவன்‌ நம்மைப்‌ பார்த்து இன்று சொல்லும்‌ வார்த்தை : "திறக்கப்படு". செவிகள்‌ மட்டுமல்ல, இதயங்களும்‌ கூடத்தான்‌!


 திருவுரைத் தேனடை
அருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
 
 
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
 
 
 
 
 
அருள்பணி: மாணிக்கம் - திருச்சி

 
 
 
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ