திருமணப் பாடல்கள் | வாருங்கள் மணமக்களே |
வாருங்கள் மணமக்களே இறை அருள் தரவே வாரீர் - நீவிர் ஓர் மனம் கொண்டு அருட்சாதனங்கள் கண்டு நிறைவுடன் வாழவே நாளும் இறைவழி வாழ்ந்திடவே இருமணம் ஒருமனம் ஆகிடுமே நிறை அருள் உன் வழி நின்றிடுமே குறையெல்லாம் நிறைவாய் மாறிடுமே குவலயம் உம்மை வாழ்த்திடவே தேவனின் திருச்சபைத் தோட்டத்திலே நறுமணம் வீசிட நுழைந்திடுவீர் அருட்சாதனங்கள் என்றொரு திருவிளக்கை இருவரும் இணைந்து ஏற்றிடவே வாழ்வின் உயர்விலும் தாழ்விலுமே இருவரும் இணைந்தே சென்றிடவே இயேசுவின் அன்பினை இதயத்திலே ஏற்றிட வருவீர் மணமக்களே |