Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  விதை

                                              

  17 - உன்னையறிந்தால்..  
      
 
பெரிய நிறுவனம் நிறுவனம் ஒன்றில், காலையில் அனைவரும் வேலைக்கு வந்தவர்கள் அறிவிப்பு பலகையை பார்த்துவிட்டு வருத்தத்தோடு சென்று கொண்டிருந்தார்கள். அதில் "இதுவரை உங்களுடைய வளர்ச்சிக்கும் இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் தடையாக இருந்தவன் இறந்துவிட்டான். இறந்த அந்த நபருக்கான இறுதிச்சடங்கு, நாம் அனைவரும் கூடும் அறையில் இன்னும் சற்று நேரத்தில் நடைபெறும் என்று அதில் எழுதியிருந்தது. நம்முடன் வேலைபார்த்த ஒருவர் இறந்துவிட்டாரே என்று முதலில் செய்தியைபார்த்தும், அனைவரும் வருத்தப்பட்டனர். ஆனால் நம்முடைய வளர்ச்சிக்கும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் தடையாக இருந்த அந்த மனிதர் யார் என்று அறிய, அனைவரும் ஆவலாக சென்றனர். அனைவரும் ஆவலோடு அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை நோக்கிச்சென்றனர். ஒருவர் ஒருவாரக சவப்பெட்டியைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய், பேச்சற்றவர்களாக அமைதியாக ஒதுங்கி சென்றனர். சவப்பெட்டியில் பெரிய கண்ணாடி ஒன்று பொறுத்தப்பட்டிருந்தது. சவப்பெட்டியை பார்க்க சென்றவர்களுடைய முகம் அந்த கண்ணாடியில் தெரிந்தது. அதற்கு அருகில் வாசகம் ஒன்று எழுதப்பட்டிருந்தது. அதில் "உங்களுடைய வளர்;ச்சியை தடைசெய்யும் ஒரே ஒரு ஆள் அது நீங்கள் தான். உங்களுடைய வாழ்வில் எழுச்சியை நீங்கள் தான் உண்டாக்க முடியும். உங்களால் மட்டுமே உங்கள் மகிழ்ச்சியை, வெற்றியை, முன்னேற்றத்தை உருவாக்கமுடியும். நீங்கள் தான் உங்களை உருவாக்க முடியும்" என்று எழுதியிருந்தது.

உங்கள் தலைவர், நண்பர்கள், பெற்றோர்கள், நிறுவனம் மாறுவதால் நீங்கள் மாறுவதில்லை, மாறாக நீங்கள் மாறுவதால் தான் உங்கள் வாழ்க்கை மாறுகிறது. உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள்தான் பொறுப்பு. பிறரை பொறுப்பேற்க வைக்காதீர்கள். உன்னோடு கொண்டிருக்கும் உறவே உண்மையான மற்றும் உன்னதமான உறவு. உன்னைக் கவனி.

இறைவார்த்தை:
 "உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதாரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்? அல்லது அவரிடம். "உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா?" என்று எப்படி கேட்கலாம். "  (மத்தேயு 7:3)

"நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்று போனால் எதைக்கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும். வேறொன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். (மத்தேயு 5: 13)

 "ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்."  (மத்தேயு 7:12)

 "ஆவிக்குரியவரோ அனைத்தையும் ஆய்ந்துணர்வார். எவரும் அவரை ஆய்வுக்கு உட்படுத்தமுடியாது." (1கொரிந்தியர் 2:15)
                                                                                                          பாதர்: ஜெயசீலன்
                                                                                                               திண்டுக்கல்

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!