Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  விதை

                                              

  16 - உங்கள் சம்பளம் எவ்வளவு?  
      
 
வேலை முடிந்து வீட்டுக்கு வெகுநேரம் கழித்து வந்தார் அந்தத் தந்தை. தந்தையினுடைய வருகைக்காக கதவருகில் காத்துக்கொண்டிருந்தான் அந்த 5 வயது மகன்.
மகன் : அப்பா நான் ஒரு கேள்வி கேக்கலாமா?
தந்தை: ம்ம். கேள்!
மகன்: அப்பா ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு உங்களுக்கு சம்பளம்?
தந்தை: அது உனக்கு தேவையில்லாதது... போய் உன் வேலையைப் பார்"
என்று கோபமாகச் சொன்னார்.
மகன்: இல்ல தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன். அப்பா கொஞ்சம் சொல்லுங்க
தந்தை: கட்டாயம் உனக்கு சொல்லனுமா? ஒருமணி நேரத்திற்கு 100 ரூபாய்
என்று சொன்னார்.
மகன்: "ஓ...அப்படியா...எனக்கு 25 ரூபாய் கடன் கொடுக்க முடியுமா" என்று
கேட்டான் அந்த மகன்.
தந்தை கோபத்தோடு "இதுக்குத்தான் கேட்டியா? இந்த காச வாங்கி போய் பொம்மை மற்றும் தேவையில்லாத பொருள்களை வாங்கி செலவு செய்யலாம் என்று நினைக்கிறாயா? போ, போய் படு" என்று கத்தினார். அந்தச் சிறுவன் சோகமாக தன்அறைக்குச் சென்று கதவை சாத்தினான். அந்தத் தந்தை இருக்கையில் அமர்ந்து மகன் கேட்டக் கேள்வியை நினைத்து வெதும்பிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து கோபம் குறைந்த பிற்பாடு சிந்தித்துக்கொண்டிருந்தார். ஒருவேளை அவனுக்கு "அந்தப் பணம் எதாவது வாங்க தேவைப்பட்டிருக்குமோ?" என்று நினைத்துக்கொண்டே அவனுடைய அறைக்குச் சென்றார். மகனைப்பார்த்து "என்னப்பா தூங்கிட்டியா?" என்று கேட்டார். "இல்லப்பா நான் முழிச்சிட்டுத்தான் இருக்கேன்" என்று பதில் வந்தது. நான் "உன்மேல அதிகம் கோபப்பட்டுட்டேன் என்ன மன்னிச்சிடு இந்தா நீ கேட்ட 25 ரூபாய்" என்று கொடுத்தார். மகன் "நன்றி" என்று சொல்லி மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டான். பின் தன் தலையணை அடியில் இருந்த சில சில்லறைக் காசுகளை எடுத்தான். இதைப்பார்த்த தந்தை "நீ ஏற்கனவே பணம் வைத்திருக்கிறாய் ஏன் என்னிடம் பொய் சொல்லி வாங்கினாய்" என்று மீண்டும் அவன் மீது கோபப்பட்டார். அந்தச் சிறுவன் "என் கிட்ட 75 ரூபாய் இருக்கிறது. இன்னும் 25 ரூபாய் இருந்தால் 100 ரூபாயாக சேர்த்து உங்ககிட்ட கொடுத்தா, என்கூட பேச, விளையாட, சாப்பிட ஒரு மணிநேரம் கொடுப்பீங்களா?"என்று சிறுவன் கேட்டான். "நாளைக்கு மறந்து விடாமல் ஒருமணிநேரத்திற்கு முன்னதாகவே வாங்க, நான் உங்ககூட இரவு சாப்பாடு சாப்பிடனும்" என்று சொல்லி 100 ரூபாய் கொடுத்தான் அந்த சிறுவன். தந்தை இதைக் கேட்டவுடன் உடைந்து போனார். தன் மகனை இறுக அணைத்து, அவனை முத்தமிட்டு, அவனிடம் மன்னிப்பு கேட்டார்.

உறவுகளுக்கு நேரத்தை ஒதுக்குவோம்... நீங்கள் வேலைப்பார்க்கும் இடத்தில் ஒரு நபர் இறந்து விட்டால் அந்த இடத்தில் வேரு ஒரு நபரை ஒருமணிநேரத்தில் அமர்த்திவிடுவார்கள். உறவுகளை இழந்துவிட்டால்..........?


இறைவார்த்தை:

 "தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். முற்றாக அவர்களை ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்துத் திருத்திஇ அறிவு புகட்டி வளர்த்து வாருங்கள்."  (எபேசியர் 6: 4)

 "பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். அப்படி செய்தால் அவர்கள் மனந்தளர்ந்து போவார்கள்."  (கொலோசையர் 3: 21)

"ஒரு மணி நேரம் விழித்திருக்க உனக்கு வலுவில்லையா?" (மாற்கு 14: 37 )

 "தந்தையை தவிர வேறு எவரும் மகனை அறியார்: மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ, அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்;." (மத்தேயு 11;: 27)

 "பிள்ளை மீனைக் கேட்டால், உங்களுள் எந்த தந்தையாவது மீனுக்குப் பதிலாக பாம்பைக் கொடுப்பாரா?."  (லூக்கா 11:11)
                                                                                                          பாதர்: ஜெயசீலன்
                                                                                                               திண்டுக்கல்

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!