Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  விதை

                                              

  15 - குறைகளை நிறைகளாக மாற்றுவோம்  
      
 
ஒரு கண், ஒரு கால் மட்டும் உள்ள ஒரு அரசன் ஒருவன் இருந்தான். ஒரு நாள் அவன் ஓவியம் வரைபவர்களை அழைத்தான். என்னை அழகாக தத்துருபமாக வரைபவர்களுக்கு பரிசு என அறிவித்தான். ஒரு கண் மற்றும் ஒருகால் மட்டும் கொண்ட இவரை எப்படி அழகாக வரைவது? என்று பலர் முடியாது என ஒதுங்கிவிட்டனர். ஆனால் ஒரு ஓவியர் முன்வந்தார். வரைந்து முடித்த பிற்பாடு அனைவரும் ஆச்சரியத்தோடு பார்த்தனர். மிகவும் தத்ரூபமாக இருந்தது. அந்த ஓவியத்தில் அரசன் மரக்கிளையில் உள்ள ஒரு பறவையை வேட்டையாடுவதற்காக மிகவும் குறிப்பார்த்து ஒரு கண்ணை மூடியும் ஒரு காலை மடக்கியும் இருப்பது போல் இருந்தது.
"பலவீனத்தை மறைத்து பலத்தை வெளிப்படுத்தலாமே! அல்லது பலவீனத்தையே பலமாக மாற்றலாமே". மற்றவர்களுடைய தவற்றை மறைக்கும் பொழுது கடவுள் நமது குற்றத்தையும் மறைப்பார்.


இறைவார்த்தை:

 "உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்."  (மத்தேயு 7:3)

 "நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்."  (மத்தேயு 7:17)

 "உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்." (மத்தேயு 5:48)
                                                                                                          பாதர்: ஜெயசீலன்
                                                                                                               திண்டுக்கல்

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!