Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் கடிதம்

                                                                

          யேசு கிறிஸ்து தன் பாசமுள்ள மக்களுக்கு எழுதும் பாசமுள்ள கடிதம்


என் அன்பும் பரிவும் பாசமுமிக்க நேசக் குழந்தைகளுக்கு! உங்கள் அருமை தெய்வீக அப்பா யேசு கிறிஸ்து திவ்ய நற்கருணைப் பெட்டியிலிருந்து பேசுகிறேன்!

என் அருமைக் குழந்தைகளே! நான் திவ்ய நற்கருணையில் தெய்வீகத்துடனும், ஆத்தும சரீரத்துடன் இருப்பதை நீங்கள் நம்பமாட்டீர்களா? நான் தன்னந் தனிமையில் எவ்வளவு காலம் உங்கள் வரவுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.

உங்களைப் பார்க்கத் துடிக்கிறேனே என்பதை என்றைக்காவது நீங்கள் நினைத்ததுண்டா? எவ்வளவு காலம்... நான் உங்கள் வருகைக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்?எத்தனை வருடங்கள் நீங்கள் இந்த உலகில் வாழப் போகிறீர்கள்? எப்பொழுதாகிலும் நினைத்ததுண்டா?

என் அருமைச் செல்வங்களே! நீங்கள் உங்களுக்கு நான் கொடுத்த அருமையான காலங்களை.... இதுநாள் வரை வீணாக்கி விட்டீர்களே ?நாளை...நீங்கள் உயிருடன் இருப்பீர்கள் என்று,இன்று உங்களால் யுகிக்க முடியுமா? இன்று இரவு...நீங்கள் நித்திரைக்கு போகுமுன் ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். நீங்கள் உங்கள் கண்களை மூடுவதற்கு முன், உங்கள் தகப்பனாரையோ, தாயாரையோ, கணவனையோ, மனைவியையோ, பாசமுள்ள பிள்ளைகளையோ, பேரக் குழந்தைகளையோ பார்ப்பது கடைசியாக இருக்கலாம் அல்லவா?

காலையில் கண் விழிப்போமா அல்லதுகண் விழிக்க மாட்டோமா என்பது படுக்கப்போகும் உங்களுக்குத் தெரியுமா. அதுவே கடைசி இரவாய் இருக்கலாம் அல்லவா?

என் அன்புச் செல்லக் குழந்தைகளே! நீங்கள் எப்பொழுதாவது உங்கள் நித்திரையில் இறந்துவிடுவோம் என்று நினைத்ததுண்டா? நீங்கள் நினைக்கலாம். நாம் நல்ல சரீர சுகத்துடன்தானே இருக்கின்றோம். இவ்வுலகில் மிகுந்த பணக்காரன், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரன் என இறுமாப்புடன் இருக்கலாம். இதுதான் உலக இயல்பு, ஆனால்... ஆனால்,  நீங்கள் திடீரென இறந்து விட்டால் இறந்த பின் உங்களுக்கு கல்லறை கொடுக்கப்படும் நிலம், உங்களை அடக்கம் செய்யும் பெட்டியின் நீளம்,  அகலம் மட்டும்தான் தரப்படும். அதுவும் சில காலம்தான். அதன்பின்...? நீங்கள் என்னவாகுவீர்கள். ? அடக்கம் பண்ணிய நிலம்...? யாருக்குச் சொந்தமாகும். அதைப் பற்றி எப்பொழுதாவது சிந்தித்தீர்களா? என் அன்பார்ந்தவர்களே! நீங்கள் உயிருடன் இருக்கும்போது,  உங்களிடம் சொத்து, சுகம் இருக்கும்போது உங்கள் மீது பாசமழை கொட்டுபவர்கள், உங்களை விட்டு ஒரு கணமும் உண்மையில் பிரிய மனமில்லாதவர்கள் முதலாய், நீங்கள்மருத்துவமனையில் இறந்துவிட்டால், பிணம் எப்பொழுது வரும் என்றுதான் கேட்பார்கள். பிணம் வந்தபின் கையில், கழுத்தில் போட்டுள்ள நகைகளை கழட்டு என்றுதான் சொல்லுவார்கள். குடும்பங்களில் அந்த நகை எனக்குத்தான், இந்த நகை உனக்குத்தான் என்று பிணத்தை எடுக்கும் முன்பே சண்டை சச்சரவுகள் ஆரம்பித்து விடும்.  அது முடிந்த பின்பு பிணம் நாற்றம்  அடிக்க ஆரம்பித்து விட்டது, சீக்கிரம் கல்லறைக்கு கொண்டு போய் அடக்கம் செய்யுங்கள் என்றுதான் சொல்வார்கள். அவசரப்படுவார்கள். பல தேசங்களில் அடக்கம் பண்ண இடம் இல்லாததால் எரிந்து ஒருபிடி சாம்பலை பத்து நிமிடத்தில் தந்து விடுவார்கள். இதுதானப்பா இவ்வுலக இயல்பு! இப்பொழுது புரிகிறதா நான் சொல்கிறதன் அர்த்தம்?

என் செல்லக் குழந்தைகளே! ஓ! என் அன்புமிக்க மக்களே! இவ்வுலகத்தில் நீங்கள் பிறக்கும்போது என்ன கொண்டு வந்தீர்கள்? போகும் போது என்ன கொண்டு போகப் போகிறீர்கள், இதைப்பற்றி எப்பொழுதாவது நினைத்ததுண்டா? ஏன்? வீணாக நான் கொடுத்த உங்கள் எஞ்சிய நாட்களை வீணாக்குறீர்களா? என்னை நினையுங்கள்! என் அன்பை நினையுங்கள்: என் பாசத்தை நினையுங்கள்! நான் உங்களுக்காக உங்களைப் பார்க்க, திவ்ய நற்கருணைப் பெட்டியில் அடைபட்டு ஆத்தும சரீரத்துடனும், தெய்வீகத்துடனும் உங்களைப் பார்க்கத் துடிக்கின்றேனே, நீங்கள் செய்த பாவங்களை, உங்கள் வாழ்நாளில் செய்த சகல பாவங்களையும் நீங்கள் மனதார வருந்தி, மனம் உருகி மன்னிப்புக் கேட்டு இனிமேல் அவ்விதம் திரும்ப செய்யமாட்டேன் என்றால், நான் உங்களை தீராத நரக நெருப்பிலுருந்து காப்பாற்றுவேன் என உறுதி கூறி உங்களை என்னுடைய மோட்ச இரட்சணியத்தில் சதாகாலமும் என்னுடன் இருக்க வழி செய்வேன்.

நீங்கள் உண்மையான உங்கள் வாழ் நாட்களில் செய்த சகல பாவங்களுக்கு உத்தம மனஸ்தாபப்பட்டால், என் அளவு கடந்த அன்பையும், ஆசீரையும் உங்களுக்குப் பொழிந்து உங்களை புனிதப்படுத்துவேன். உங்களுக்குத் தெரியாதா? நான் உங்கள் பாசமுள்ள தெய்வீக அப்பாவென்று? அதை நம்பமாட்டீர்களா? நான் தானே உங்கள் பாவங்களுக்காக, நீங்கள் செய்த பாவங்களுக்காக உங்களை இரட்சிக்க, லூசிபேர் என்ற அந்த அரக்க நச்சுப்பாம்பிடமிருந்து, அந்த சாத்தானிடமிருந்து, அந்த நரக நெருப்பிலிருந்து உங்களைக் காப்பாற்ற கல்நெஞ்ச யுதர்களால் அடிமிதிபட்டு சிலுவையில் இரு கள்ளவர்களுக்கு
மத்தியில் எல்லா இரத்தமும் சிந்தி செத்தேன் என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா? எனது கொடூரமான முகத்தை அட்டைப்படத்தில் பாருங்கள். இப்பொழுதாவது என்னை நம்பமாட்டீர்களா ? என்னிடம் வரமாட்டீர்களா ? என்னை வந்து பார்க்க மாட்டீர்களா ? நான் உங்கள் அன்பும் பாசமும் உள்ள தெய்வீக அப்பா யேசு!
உங்களை எல்லாம் நித்திய நரக நெருப்பிலிருந்து உங்கள் எல்லோரையும் காப்பாற்ற ஆவலோடு எதிர்பார்க்கிறேன். வாருங்கள் என் மக்களே!

இப்படிக்கு
உங்கள் அன்பும் பாசமும், நேசமும், இரக்கமும் காப்பாற்றத் துடிக்கும் தெய்வீக அப்பா
இயேசு கிறிஸ்து


 

திருப்பாடுகளின் அறிவிப்பு - யேசுவின் கல்வாரி அனுபவம் - இறைவனோடு இணைந்து யேசு கல்வாரியில் சிந்திய திருஇரத்தம் நமக்குத் தரும் சிந்தனைகள்


நம் மீட்பர் யேசு மரித்து அடக்கம் செய்யப்பட்ட செய்தித் தொகுப்பை போப்பாண்டவரும்
விசுவாசம் நிறைந்த அரசர்களும் சேர்ந்து ஒரு வெள்ளிப் பேழையில் வைத்துக் காத்து
வருகிறார்கள் என்ற செய்தியின் பிரதிதான் இது. கங்கேரி நாட்டு அரசி புனித எலிசெபத், புனித மெட்டில்டா, புனித பிரிஜித் போன்றோர் யேசுவின் கல்வாரி அனுபவத்தை புரிந்துகொள்ள உருக்கமாய் செபம் செய்தபோது அவர்களுக்கு மீட்பர் தோன்றி சொன்னதாவது.:


உங்களை மீட்க நான் விண்ணிலிருந்து  பூமிக்கு வந்தது, மனிதர் எல்லோரும் தெய்வ
பக்தியிலும், நீதியிலும் வாழவும்தான். இது நிறைவாக இருக்கிறதென்றால் இல்லவேயில்லை.
அப்படி நிறைவான பலனை பெற வேண்டுமென்றால் சில நல்லவற்றைப் பின்பற்ற
வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் பணி செய்தல் கூடாது. அன்று ஆலயத்திற்கு சென்று
பாவமன்னிப்பு பெற செபம் செய்தல் வேண்டும். ஆறு நாட்கள் நமக்காகவும், ஒரு நாள் நம்
ஆன்மீக வாழ்விற்காகவும் ஒதுக்க வேண்டும். அன்று நல்ல காரியங்களைச் செய்யவும், கலை வேலைகளில் ஈடுபடவும் செய்தல் வேண்டும்.
 

கல்வாரி அனுபவ சிந்தனைகள்


என்னை வதைக்க
150 படை வீரர்கள் வந்தார்கள்.
அதில்
23 பேர் சேர்ந்து என்னை வதைத்தனர்.
நீதியை நிறைவேற்ற
83 பேர் இருந்தனர்.
என் தலையில்
150 முறை அடித்தார்கள்.
என் தோளை
80 முறை மிதிக்கவும் செய்தார்கள்.
என் தலைமுடியில்
24 முடிச்சுகள் இட்டு இட்டு இழுத்தனர்.
என் முகத்தில்
180 முறை துப்பினர்.
எனக்கு
6660 அடிகள் அடித்தனர்.
அதில்
110 அடிகள் என் தலையில் விழுந்தது.
என்னைக் கொடுரமாய்த் தள்ளி 12 மணிக்கு என் தலையில் முள்முடியை வைத்தனர்.
என் தாடி மீசையை
23 முறை பரித்து எடுத்தனர்.
முள்முடியில்
72 முட்கள் இருந்தது.
அவற்றில்
3 முட்கள் என் தலையில் ஆழமாய் பதிந்து இருந்தது.
என் தலையில் சம்மட்டி கொண்டு பல அடிகள் அடித்தனர்.
என்மேல் ஒரு சிவப்பு அங்கியைப் போர்த்து அரசன் என்று ஏளனம் செய்தனர்.
1008 முறிவுகள் என் சரீரத்தில் உண்டாகி இருந்தது.
608 படையாளிகள் சேர்ந்து என்னை கல்வாரி மலைக்கு கொண்டு சென்றனர்.
படைவீரர்கள் மூன்று பேர் என் காவலுக்கு இருந்தனர்.
என்னை வதைக்க
1008 பேர் இருந்தனர்.
உங்களுக்காக நான்
28430 சொட்டு இரத்தம் சிந்த வேண்டி இருந்தது.

நான் உங்களுக்காகச் சிந்திய இரத்தத்தின் பலன் பெற
(2 க.க. செபம், 2 மங்.வா. செபம், 2 திருத். )
சொல்லவும்.

இதை நாள்தோறும் விடாமல் 3 வருடத்திற்கு சொன்னால் 5 பலன்களைத் தருவேன்.
1. எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கும்
2. உத்தரிக்கும் இட வேதனையிலிருந்து விடுதலை
3. இச்செபத்தில் ஈடுபட்டு மூன்று வருடங்களுக்கு முன் மரித்தாலும் இதன் பலனைப்   
     பெறுவர்
4. உங்களின் மரணம் யேசுவிற்காக மரிப்பதற்கு சமம் ஆகும்.
5. மரண வேளையில் உங்களுடையவும், உங்கள் உறவினர்களின் ஆன்மாவையும்
     நான்கு தலைமுறைகளாகக் காப்பாற்ற அவர்களிடைய தோன்றுவேன்.


திருச்சபைக்கு எதிராக இருப்பவரையும், என்னை வெறுப்பவரையும் கண்டு
நானும் வெறுப்பேன்.
என்னை எண்ணி நடப்பவர்கள் வெள்ளத்தில் விழுந்தாலும் மரிக்க மாட்டார்கள். நோயிலிருந்து, இடிமின்னலிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவேன்.
நீதி இன்றி நடக்கும் அதிகாரிகள், புறணி பேசுபவர்கள், பொய்ச்சாட்சியாளர்கள்
இவர்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவேன்.
இந்தச் செபத்தைச் செய்யும் கற்பிணிப் பெண்கள்சுக பிரசவம் பெறுவர்.
இந்தச் செபத்தைச் சொல்லி வரும் வீடுகளுக்கு எந்த தீமையும் நெருங்காது. இதைப் பின்பற்றுபவர்களுக்கு மரணம் ஏற்படும் 40 நாட்களுக்கு முன் மரியாள் தோற்றமளிப்பார். இந்தச் செய்திகள் எல்லாம் புனித கிரகோரியாருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இயேசு வெளிப்படுத்திய இந்தச் செய்திகளையெல்லாம் 13ம் லியோன் போப்பானவர் 1890ம் ஆண்டு ஏப்ரல் 5ம் நாள் உரோமையில் உறுதி செய்தார்.
இதன் பிரதியை கையில் கொண்டு நடப்பது மிக நல்லது.
இயேசுவின் நாமத்திற்கு வணக்கம் உண்டாவதாக. ஆமென்.
 

சமர்ப்பண செபம்


இரக்கமே உருவான இயேசுவே!
பாவிகளாகிய எங்களை மீட்க அன்று நீர் சகித்த துன்பங்களையும், பெற்ற அடிகளையும்,
உடல் முறிவுகளையும் நினைத்து உமக்கு நன்றி சொல்கிறோம். நீர் சிந்திய 28430 துளிகளை
நினைத்து செபம் செய்பவருக்கு 5 கிருபைகளைக் கொடுப்பேன் என வாக்கு கொடுத்தீரே.
உமக்கு கோடான கோடி நன்றி நவில்கின்றோம். ஆமென்.
 

இயேசுவின் இரத்தத்திற்கு ஒப்புக்கொடுக்கும் செபம்.


1. இயேசுவின் முள்முடியிலிருந்து வடிந்த திருஇரத்தமே,   சாத்தானின் தலையை   
    நசுக்கணுமே.. (10 முறை)

2. இயேசுவன் கரத்திலிருந்து வடிந்த திருஇரத்தமே, சாத்தானின் தலையை நசுக்கணுமே
    (10 முறை)

3. இயேசுவின் விலாவினின்று வடிந்த திருஇரத்தமே, சாத்தானின் தலையை நசுக்கணுமே
    (10 முறை)

4. இயேசுவின் கணுக்காலிலிருந்து வடிந்த திருஇரத்தமே, சாத்தானின் தலையை   
     நசுக்கணுமே  (10 முறை)

5. இயேசுவின் சரீரத்தில் வாங்கப்பட்ட அடிகளே, எங்களை மீட்கணுமே (10 முறை)

6. பரிசுத்த தாயே, எங்களுக்காக வேண்டி செபிக்கணுமே (20 முறை)

7. இயேசுவின் இதயத்திலிருந்து புறப்பட்ட சிநேகமே, எங்களையும், உலகில் உள்ள எல்லா
    மக்களையும் உத்தரிக்கும் இடத்தில் இருக்கும் ஆன்மாக்களையும் மீட்கணுமே (3 முறை)

 

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பதினைந்து ரகசிய சித்திரவதைகள்!

(இவை பிரான்சிஸ்கா, சாந்தா கிளாரா சபையைச் சார்ந்த பயபக்தியான கடவுளின்
அன்புப் பிள்ளையான சகோதரி மரிய மக்தலேன் அவர்களுக்கு வெளியடப்பட்டது.


இவர் ரோமில் வாழ்ந்து, மரித்து அங்கே புனிதப் பட்டம் பெற்றவர்.
இயேசு தாம் மரிப்பதற்கு முன்தின இரவு பட்ட ரகசிய சித்திரவதைகளைப் பற்றி
ஏதேனும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற இந்த சகோதரியின் மிகுந்த ஆர்வமுடைய
விருப்பத்தை நிறைவேற்றினார்.

இந்த பூமியில் மிகவும் இழிவானவன் என்று என்னை யுதர்கள் கருதினார்கள்...
அதனால்தான்...

1. அவர்கள் என் இரு கால்களையும், ஒரு கயிற்றினால் கட்டி, மெத்தைப் படிக்கட்டுகள்
    வழியாக என்னை தரதரவென்று இழுத்துக் கொண்டு மிகவும் அசுத்தமான, குமுட்டல்
     வரக்கூடிய ஒரு அறைக்குள் சென்றார்கள்.

2. அவர்கள் என் ஆடைகளைக் களைந்து என் உடல் முழுவதும் இரும்புச் சாட்டையால்
    அடித்தார்கள்.

3. அவர்கள் என் உடலை ஒரு கயிற்றினால் கட்டி தரையின் ஒரு முறையிலிருந்து  
    இன்னொரு முனைக்கு இழுத்தார்கள்.

4. அவர்கள் ஒரு மரத்துண்டின் மீது ஒரு சுருக்கு முடிச்சில், நான் முடிச்சு அவிழ்ந்து
    கீழே விழும்படி என்னைக் கட்டித் தொங்க விட்டார்கள். இந்த சித்திரவதையைத் தாங்க
    முடியாமல் நான் இரத்தக் கண்ணீர் வடித்தேன்.

5. அவர்கள் என்னை ஒரு மரக்கம்பத்தில் கட்டி என் உடலைத் துளைத்தார்கள்.

6. அவர்கள் என்னை கற்களால் அடித்தும், எரியும் தீப்பந்தங்களால் என்னைச்
     சுட்டெரித்தார்கள்.

7. அவர்கள் என்னை குத்தூசிகளால் துளைத்தார்கள். என் தோல், சதை மற்றும் இரத்தக்   
    குழாய்களை கூரிய ஈட்டிகளால் குத்திக் கிழித்தார்கள்.

8. அவர்கள் ஒரு கம்பத்தில் என்னைக் கட்டி வெறும் கால்களோடு நெருப்போடு,
    ஜீவாலிக்கின்ற ஒரு உலோகத் தகட்டின் மேல் நிற்கச் செய்தார்கள்.

9. அவர்கள் ஒரு இரும்பு மகுடத்தை என் தலைக்குச் சூட்டி, மிகவும் அசுத்தமான ஒரு
     துணியால் என் கண்களைக் கட்டினார்கள்.

10. அவர்கள் கூர்மையான ஆணிகள் நிறைந்த ஒரு நாற்காலியின் மீது என்னை உட்காரச்
      செய்து என் உடல் முழுவதும் ஆறாத காயங்களை ஏற்படுத்தினார்கள்.

11. அவர்கள் என் காயங்களில் ஈயத்தையும் பிசினையும் ஊற்றினார்கள். அதன் பின்
      ஆணிகள் நிறைந்த நாற்காலியில் என்னை அழுத்தினார்கள். அப்போது அந்த ஆணிகள்
      என் சதையைத் துளைத்துக் கொண்டு இன்னும் ஆழமாக உள்ளே சென்றன.

12. அவர்கள் எனக்கு மிகுந்த அவமானமும், வேதனையும் உண்டாகும்படி என்னுடைய
      பிடுங்கி எறியப்பட்ட தாடி மயிர்க் கால்களில் ஊசிகளால் குத்தினார்கள். பின்பு என் இரு
      கைகளையும் என் முதுகின் பின்புறம் கட்டி சிறையின் வெளியே என்னை அடித்தும்
      உதைத்தும் இழுத்துச் சென்றார்கள்.

13. அவர்கள் என்னை ஒரு சிலுவையின் மீது தூக்கியெறிந்து நான் மூச்சுவிட திணறும்படி
       என்னை இறுக்கிச் சிலுவையுடன் சேர்த்துக் கட்டினார்கள்.

14. அவர்கள் நான் சிலுவையில் பூமியின் மீது படுத்திருக்கும்போது என்மீது ஏறி மிதித்துச்
       சென்று என் மார்பைக் காயப்படுத்தினார்கள்.  பிறகு என் முள்முடியில் இருந்து ஒரு  
       முள்ளை எடுத்து என் நாக்கின் உள்ளே குத்தினார்கள்.

15. அவர்கள் மிகவும் அசுத்தமானகழிவுப்பொருட்களை என்வாயில் ஊற்றி, என்னை மிக 
      மிக அருவருப்பான மொழிகளால்  என்னை தூஷித்தார்கள்.
      எனக்கு ஆறுதல் அளிக்க யாராவது ஒருவரை தேடினேன். ஆனால் யாரும் 
      கிடைக்கவில்லை
      பின்பு இயேசு கூறியதாவது : என் மகளே! ஒவ்வொருவரும் இந்த பதினைந்து ரகசிய
      சித்திரவதைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம். அவை
      ஒவ்வொன்றும் போற்றப்பட வேண்டும். யார் ஒருவர் இந்த பாடுகள் ஒன்றேனும் மிகுந்த
     அன்போடு எனக்கு காணிக்கையாக்கி பின்வரும் செபத்தினை பக்தி விசுவாசத்தோடு   
      நாள்தோறும் சொல்கிறார்களோ, அவர்களுக்குத் தீர்ப்பு நாளன்று முடிவில்லாத 
      மகிமையை சன்மானமாக அளிப்பேன்.
 

செபம்


என் ஆண்டவரே! என் தேவனே! நீங்கள் விலை மதிக்க முடியாத திரு இரத்தத்தை சிந்தின
இந்த பதினைந்து ரகசிய சித்திரவதைகளில் உங்களைப் போற்றி மகிமைப் படுத்த வேண்டும் என்பதே என்னுடைய உறுதியான விருப்பமாகும். கடற்கரையில் இருக்கும் மணலின் எண்ணிக்கையளவிலும், புல்வெளியில் இருக்கும் புற்களின் எண்ணிக்கையளவிலும், தோட்டங்களிலிருக்கும் பழங்களின் எண்ணிக்கையளவிலும், மோட்டசத்திலுள்ள சம்மனசுகளின் எண்ணிக்கையளவிலும், மரங்களில் இருக்கும் மலர்களின், இலைகளின் எண்ணிக்கையளவிலும், வானத்திலுள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை அளவிலும், பூமியில் உள்ள எல்லா ஜீவராசிகளின் எண்ணிக்கையளவிலும், ஆயிரமாயிரம் தடவை நீங்கள் போற்றி வணங்கி, ஆராதித்து மகிமைப்படுத்துவதாக.

ஓ!என் இனிய இயேசுவே! உங்களின் மிக புனிதமான இருதயம், உங்கள் ஈடு இணையற்ற தியாகமிக்க புனித பலிபீடத்தில் அருட்சாதனங்கள், புனித கன்னிமரியாள், மகிமை மிக்க சம்மனசுகளின் ஒன்பது பாடல் குழு மற்றும் அனைத்து புனிதர்களின் சேனைகள், என்னுடன் மற்ற எல்லோருடனும் சேர்ந்து முடிவில்லாத காலம்வரை உம்மைப் போற்றுவோம்.

அதே போல், அன்பான இயேசுவே! உமக்கு நன்றி செலுத்தவும், உமக்கு சேவை செய்யவும்,
என்னுடைய உடல், ஆன்மா அனைத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதே
என்னுடைய விருப்பமாகும். என்னுடைய எல்லா பாவங்களுக்காகவும் மனம் வருந்தி உம்மிடம் மன்னிப்பு கேட்கிறேன் இயேசுவே. இயேசு கிறிஸ்துவின் எல்லா மேன்மைகளையும் பொருட்டு நிம்மதியான மரண நேரத்தையும் அளித்திருளுமாறு, உத்தரிக்கிற ஸ்தலத்திலிருக்கும் ஆன்மாக்களை விடுதலை அடையுமாறு வேண்டுகின்றோம். இந்த ஜெபத்தை என் மரண நேரத்தில் ஒவ்வொரு மணி நேரமும் நான் புதுப்பிக்க விரும்புகிறேன், என் அருமை இயேசுவே! என் மன உறுதியைப் பலப்படுத்தும், ஆமென்.

 

இயேசுகிறிஸ்துவின் சித்திரதையின் விளக்கம்


ஆயுதம் தாங்கிய சேவகர்கள்
150,
என்னைக் கட்டியிருக்கும்போது இழுத்தவர்கள்
23,
கொலையாளிகள்
83,
நான்தலையில் வாங்கிய அடிகள்
150,
எனது வயிற்றில் பட்டவை
108,
எனது தோளில் பட்ட உதைகள்
80,
கயிறுகளால் எனது முடியைக் கட்டி இழுத்துக்கொண்டு போனது
24 தடவைகள்.
என் முகத்தில் உமிழ்ந்தது
180 தடவைகள்.
என் உடலில் பட்ட அடிகள்
6666.
தலையில் பட்ட அடிகள்
110 .
என்னை முரட்டுத்தனமாக தள்ளி, 12 மணியளவில் என் தலை முடியைப் பிடித்துத் தூக்கி,
23 தடவை முட்களால் குத்தித்தாடியைப் பிடித்து இழுத்தார்கள்.
தலையில் பட்ட காயங்கள்
20. 
முடியிலுள்ள கூரிய முட்கள்
72.
தலையில் முட்கள் குத்திய காயங்கள்
110.
 நெற்றியில் மரண வேதனை கொடுத்தமுட்கள்
3. பிறகு தூணில் கட்டியடிக்கப்பட்டு
பரிசாக இராஜாவாக உடுத்தப்பட்டேன்.
உடலில் ஏற்பட்ட காயங்கள்
1000.
கல்வாரிக்கு என்னை நடத்திச் சென்ற சேவகர்கள்
608.
என்னை காவல் காத்தவர்கள்
3 பேர்.
என்னைப் பரிகாசம் செய்தவர்கள்
1008 பேர்.
நான் இழந்த இரத்த துளிகள்
28,430.


 

இயேசுவின் மறைக்கப்பட்ட வணக்கத்திற்குரிய தோள்களின் காயங்களுக்கு செபம்.


ஓ! என் அன்பார்ந்த இயேசுவே!
சர்வேஸ்வரனின் செம்மறிப்புருவையே, பணிவானவரே, நான் ஒரு பரிதாபத்திற்குரிய பாவி, தாழ்பணிந்து, பெரும் மரியாதை செய்து, நீர் சிலுவை சுமந்து உமது பரிசுத்தமான தோள் காயங்களை வேதனையுடனும்,பயபக்தியுடனும் ஆராதிக்கிறேன். நீர் சுமந்த பாரமான, திருச்சிலுவையின் பாரத்தால் உமது சதை பிளந்து, உமது தோளிலுள்ள எலும்புகள் வெளியே தெரிந்து, அதன் வேதனையையும், அதைவிட உடல் பூராவும் உள்ள
சொல்லொண்ணா காயங்களையும் நினைத்து, வேதனையுடன் மனம் உருகி, உம்மை நேசித்து, உம்மைப் புகழ்ந்து ஆராதிக்கிறேன். ஓ உமது தாங்க முடியாத வேதனை நிறைந்த
ஆராதிக்கத்தக்க காயங்களை நினைத்து நான் கண் கலங்குகிறேன். பாவியாகிய என்னை மனமிரங்கி மன்னித்து, அளவுகடந்த தோள்களின் வேதனை நிறைந்த காயங்களை நினைத்தும், சொல்லொண்ணா உமது சிலுவையின் பாரத்தையும் நினைத்து என் மீது மனமிரங்கும்படி அன்புடனும், பயபக்தியுடனும் கேட்டுக்கொள்கிறேன். அன்பான இயேசுவே! என்னுடைய சாவான பாவங்களையும் உமது தூய இரக்கத்தால் மன்னித்து உமது சிலுவைப் பாதை வழியாக எனக்கு வழிகாட்டி என்னை நடத்தி மோட்சம் சேர்த்தருளும், ஆமென்.

 

இயேசுவிடம் விண்ணப்ப செபம்


இயேசுவின் திரு கண்களே  - என்னைப் பாருங்கள்
இயேசுவின் திரு உதடுகளே  - என்மீது புன்சிரிப்பு சிரியுங்கள்
இயேசுவின் திருக் காதுகளே  - என் உள்ளக் கமுறுதலைக் கேளுங்கள்
இயேசுவின் திருக் கைகளே - என்னை ஆசீர்வதியுங்கள்
இயேசுவின் திருக் கரங்களே - என்னை அணைத்துக் கொள்ளுங்கள்
இயேசுவின் திருப்பாதங்களே - என்னை வழிநடத்துங்கள்
இயேசுவின் திருக் குரல்களே - என்னிடம் பேசுங்கள்
இயேசுவின் திரு இருதயமே - என்னை நேசியுங்கள்
இயேசுவின் திரு ஆவியே - என்னை ஆட்கொள்ளுங்கள்

இயேசுவின் திருச்சபையிலுள்ள அனைத்து ஆயர்களையும் குருக்களையும் கன்னியர்களையும் ஆசீர்வதியுங்கள்
இயேசு அப்பா! எங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் என் கணவன் - மனைவி,
மக்கள், பெற்றோர், பேரன்கள், பேத்திகள், பூட்டன் அனைவரையும் விசேஷித்த விதமாக
ஆசீர்வதியுங்கள்.
இயேசு அப்பா! இன்று உலகத்தில் மனித உருவத்தில் திருச்சபையிலேயே சுற்றித் திரியும்
லூசிப்பேரிடமிருந்து எங்கள் அளைவரையும் காப்பாற்றுங்கள்.
இயேசுவே கண்ணீருடன் சிரம் தாழ்த்தி, தங்கள் பாதத்தில் விழுந்து கெஞ்சி மான்றாடிக்கேட்கும் எங்கள் விண்ணப்பங்களைக் கேட்டருளும்.

இப்பொழுதும், எப்பொழுதும் இயேசுவிற்கே நன்றி! நன்றி! கோடான கோடி நன்றி! ஆமென்.

 

கண்ணீரின் செபமாலையைச் செபியுங்கள் (இந்த பக்தியைப் பரப்புங்கள்)


சிலுவை அறையப்பட்ட இயேசுவே, உமது பாதத்தண்டையில் சாஷ்டங்கமாய் விழுந்து
கிடக்கின்றோம். உமது துன்பமும் நோக்காடு மிக்க உமது சிலுவைப்பாதையிலே, உள்ளார்ந்த இரக்கத்துடன் கூடிய அன்போடு உம்மைப் பின்தொடர்ந்து, சென்ற உமது தாயாரின் கண்ணீர்களை உமக்கு ஒப்புத்தருகின்றோம்.
ஓ! நல்ல எசமானே! உமது அதி பரிசுத்த தாயாரின் கண்ணீர் கற்பிக்கும் பாடங்களை
எமது உள்ளங்களில் பதியச் செய்தருளும். அதனால் நாம் இவ்வுலகில் உமது திருச்சித்தத்தை நிறைவேற்றவும், உம்மைப் பரலோகத்தில் என்றென்றும் போற்றிப் புகழவும் வரம் பெறுவோமாக.

பெரிய மணியில் :
ஓ! இயேசுவே! இவ்வுலகில் உம்மை அதி உயர்ந்த விதமாய் அன்பு செய்தவரும், இப்போது பரலோகத்தில் உம்மைக் கனிவோடு அன்பு செய்பவருமான உமது திருத்தாயாரின்
கண்ணீரைக் கருணையுடன் நோக்கியருளும்.

சிறிய மணியில் :
ஓ! இயேசுவே! உமது அன்புமிக்க திருத்தாயாரின் கண்ணீரைப் பார்த்து எமது விண்ணப்பங்களைக் கேட்டருளும்.

முடிவில் :
ஓ! மரியாயே! அன்புமிக்க தாயே! துயரமும் இரக்கமும் மிகுந்த அம்மா! எமது செபங்களை
உம்முடைய செபங்களோடு இணைத்து, உமது திருமகனிடம் ஒப்படைத்தருளும். அவரை
நோக்கி நாங்கள் எமது உள்ளங்களைத் திருப்புகிறோம். உமது கண்ணீரைப் பார்த்து எமது
செபங்களைக் கனிவுடன் ஏற்றுக்கொள்வாராக.
நாங்கள் கேட்கும் வரங்களைத் தந்து எமக்கு நித்திய பேரின்ப மகிமையைத் தந்தருள்வாராக, ஆமென்.

- ஓ! வியாகுலம் நிறைந்த தாயே! உமது கண்ணீர் சாத்தானின் ஆதிக்கத்தை அழிப்பதாக
- எல்லாம் வல்ல அன்பு இயேசுவே! உமது தெய்வீக கருணையினால் உலகை இன்று
பயங்கரத்துக்குள்ளாக்கும் தவறுகளிலிருந்து பாதுகாப்பீராக.

 

பரிசுத்த ஆவிக்கு செபம்


எனக்கு ஒளியாயிருந்து உன்னதநிலையை நான் அடைய வழிகாட்டும் பரிசுத்தஆவியே! உமது திருநாமம் அர்ச்சிக்கப்படுவதாக. எமது அருட்கொடைகளின் மூலம் என் உள்ளத்தைப் பக்குவப்படுத்தி எனக்கு தீங்கு செய்தோரை நான் மன்னிக்க அருள்புரிபவரே!
என் வாழ்வின் எந்தச் சந்தர்ப்பத்திலும் உற்ற துணையான உமக்கு இச்சிறிய செபத்தின்
மூலம் நீர் செய்யும் சகலத்திற்கும் நன்றி கூறுகின்றேன். என் தேவைகள் எவ்வளவு முக்கியமாக இருப்பினும் எக்காரணம் கொண்டும் உம்மில் இருந்து விலகாமல் என்றும்
நிலைத்திருப்பேன் என உறுதி கூறுகின்றேன். நானும் என்னால் நேசிக்கப்படும் அனைவரும் என்றென்றும் உமது முடிவில்லா மகிமையில் பங்குபெற வேண்டுகின்றேன்.

உங்கள் தேவை எவ்வளவு கடினமாய் இருப்பினும் அடுத்தடுத்து மூன்று நாட்களுக்கு இச்செபத்தை உங்கள் தேவையைக் கேளாமல் சொல்லிவரின் உங்கள் தேவை நிறைவேறும்.

ஓ! பரிசுத்த ஆவியே உமக்கு நன்றி! உலக இரட்சகரான இயேசுவே! நீசப்பாவிகளின் மேல் அளவில்லாத இரக்கம்உள்ளவரே! முடியாத காரியங்களை கைகூடப் பண்ணியவரே! எங்கள் இயேசுவே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
(மூன்று முறை சொல்லவும்)

 

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!